Header Ads



புத்த கயா குண்டு வெடிப்பு - ஹிந்து மதத் துறவி கைது

கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள புத்த கயா கோவிலில் 10 இடங்களில் குண்டு வெடிப்புகள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.

புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இக்குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அரூப் பிரமச்சாரி என்ற ஹிந்து மதத் துறவி கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து புத்தகயா காவல் நிலைய அதிகாரி ''மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரூப் பிரமச்சாரி என்பவரை புத்த கயா குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைது செய்துள்ளதாகவும் புத்த கயா கோவிலில் தங்கி இருந்த அரூப் குண்டுவெடிப்புக்குப் பிறகு தலைமறைவாகி விட்டதாகவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரூப்பிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும்'' என்றும் தெரிவித்துள்ளார். inne

No comments

Powered by Blogger.