Header Ads



கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் சமூக ஒற்றுமை கட்டடிக்காக்கப்பட வேண்டும் - ரிஸ்வி முப்தி

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இன்று (09) வெள்ளிக்கிழமை அதிகாலை 06:25 மணிக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பேருரையையும் நடத்தினார்.

இதற்கான ஏற்பாடுகளை நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் மேற்கொண்டனர்.

கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்களின் சமூக ஒற்றுமை கட்டடிக்காக்கப்பட வேண்டும் என அவர் தமது குத்பா உரையில் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு மாற்றம் இல்லாத வகையில் ஏனைய சமூகத்தினருடன் இணங்கி வாழவும் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

13 comments:

  1. எம் அன்பார்ந்த இலங்கை அ.இ.ஜ.உ . சபைக்கு ஓர் அன்பான, உருக்கமான வேண்டுகோள்!

    நாம் உங்களை மதிக்கின்றோம்!
    நாம் உங்களுக்கு கட்டுப்படுன்றோம்!

    நாம் அனைவரும் இலங்கை அ.இ.ஜ.உ . சபை எடுக்கின்ற விடயங்களுக்கு கட்டுப்பட வேண்டுமென்றால் கீழ்வரும் விடயங்களை அ.இ.ஜ.உ . சபை கருத்தில் கொள்ளுமா???

    1. எச்சந்தர்பத்திலும் நம்பிக்கையுள்ள தைரியமான ஓர் அமைப்பாக தொழிற்படுங்கள் !
    ( மஹியங்கனை பள்ளிவாசல் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மௌனமாகவும் இந்தியாவில் பௌத்தர்களின் கோவில் தாக்கப்பட்ட போது கண்டனம் தெரிவித்தமைபற்றியும் எம் நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் அ.இ.ஜ.உ சபை தொடர்பாக வெறுப்புற்ற நிலையினை இங்கு சுட்டி காட்டலாம்.)

    2. உங்களின் பிறை தொடர்பான விடயங்களின் சட்ட திட்டங்களை அல்குரான் மற்றும் அல்ஹதிஸ் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக தீர்மானிக்கபட்டு முன்கூட்டியே மக்களிடையே தெளிவான விளக்கம் அளியுங்கள் . மேலும் இலங்கையில் பிறை அடிகடி தென்படும் இடங்களை தரவுகளின்படி ஆராய்ந்து அப்பிரதேசங்களுக்குரிய நம்பிக்கைக்குரிய பிறை கண்டறிதல் குழுவை பிரதேச உலமா சபையூடாக நியமித்து ஒவ்வொரு வருட பிறை காணுதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் !

    3. அ.இ.ஜ.உ . சபையினைப்பற்றி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவினை ஏற்படுத்துங்கள் !

    4. சபை எடுக்கின்ற முடிவுகளை யாதென உரிய முறையில் முன்கூட்டியே தெளிவுபடுத்துங்கள் !

    5.முழு நம்பிக்கையுள்ள சபையாக செயற்படுத்துங்கள் ! அதாவது எச்சந்தர்பத்திலும் பக்கச்சார்பில்லாமல் முடிவெடுங்கள் !

    6. அவ்வாறே அனைத்து விடயங்களிலும் அல்குரான் மற்றும் அல்ஹதிஸ் ஆகியவற்றிற்கு மாற்றம் அல்லாமல் தீர்மானிக்கபட்டு முன்கூட்டியே மக்களிடையே தெளிவான விளக்கம் அளியுங்கள் !

    7. பொதுவலா சேனா போன்ற ,இனவாத அமைப்புக்களை தைரியமாக முகம் கொடுங்கள் !

    8. பள்ளிவாயல்களின் மீதான தாக்குதல்கள்,வர்த்தகம் தொடர்பான பிரச்சினை போன்ற விடயங்களின்போது எச்சந்தர்பத்திலும் முகம் கொடுக்கின்ற நம்பிக்கையுள்ள அமைப்பாக வழிகாட்டுங்கள் !

    9. அது மட்டுமல்லாமல் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோகின்ற பிரச்சனைகளை எம்நாட்டு முஸ்லிம்களுக்கு மத்தியில் விழிப்புணர்வடையச் செய்யுங்கள் !

    நாம் யாவரும் அகிலத்தின் இரட்சகனாகிய அள்ளாஹ் ஒருவனைப் பயந்தவர்களாகவும்
    தலைவர்களுக்கெல்லாம் தலைவராகிய எம் நபி பெருமானார் (ஸல் ) அவர்கள் இவ்விடயத்தில் எவ்வாறு வழி காட்டியுள்ளார்களோ அதற்கேற்பவே எமது பெரு நாட்களை கொண்டாட வேண்டியவர்களாக உள்ளோம். எனவே மேற்போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தற்போது எதிர்நோக்கும் சவால்களாக இன்று எம்மத்தியில் உள்ளன. இவற்றையெல்லாம் அ.இ.ஜ.உ . சபை கருத்தில் கொள்ளுமா???

    ReplyDelete
  2. 58. அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

    59. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.4:58,4:59

    ReplyDelete
  3. ஹலாலை பிலால் ஆக்கி விட்டு இப்போது பிறையை குறையாக்கி விட்டீர்களே உங்களுக்கு மார்க்க அறிவு போதாது அது சரி சமூகம் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறீர்களே உங்களை நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்தா தலைவராக்கினார்கள் இல்லையே நீங்கள் தனக்குத்தானே தலைவர் என்று சொல்வதை எங்களால் ஏற்க முடியாது
    உங்கள் இஷ்டப்படி பிறை தீர்மானிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியது நாட்டையும் மக்களையும் குழப்பாமல் அல்லாஹ்வை அஞ்சி குர்ஆன் ஹதீஸ் படி பிறையை தீர்மானிக்கவும்
    இதை எழுதும் நானும் ஒரு மொலவிதான்

    ReplyDelete
  4. பிறையை கண்ணால் பார்த்த ஒருவர் தலிமைதுவதிட்கு கட்டுப்பட்டு நோன்பு பிடிக்க முடியா. (நான் தலிமைதுவதிக்குட் கட்டுப்பவுபவன்) எனது கேள்வி பிறை கண்ணால் பார்த்தவருக்கு நோன்பு பிடிக்க முடியுமா?

    ReplyDelete
  5. அரை குறைகளை உள்ளடக்கிய ஜம்மிய்யாவின் பிறைக் குழு.

    மார்க்கத்தைப் பற்றிய தெளிவோ, ஞானமோ இல்லாத அரை குறைகளை தலைவர்களாக கொண்டிருக்கும் ஜம்மிய்யதுல் உலமா சபையினரின் இந்த வடிகட்டிய முட்டால் தனத்தைப் பற்றிய இன்னும் சில செய்திகளை நாம் தெளிவாக அறிய வேண்டும்.

    ஏன் என்றால் பிறை பார்ப்பதைப் பற்றியோ பிறை பார்த்த தகவலை உறுதி செய்வதைப் பற்றியோ கடுகளவு ஞானம் இருந்திருந்தாலும் இவர்களை பிறை கண்ட செய்தியை மறுத்திருக்க மாட்டார்கள்.

    நபியவர்கள் பிறையைப் பற்றி சொன்ன செய்திகள் இவர்களுக்கு தெரியவில்லை.

    பிறை பார்ப்பவர்களின் சாட்சியங்களை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இவர்களுக்குத் தெரியவில்லை.

    இப்படிப்பட்டவர்கள் நாட்டின் முஸ்லீம்களின் தலைமை பீடம் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் இவர்களினால் இந்த சமுதாயத்தை நேர்வழியில் செலுத்த முடியுமா என்ன?

    மத்ஹபுகளை மார்க்கமாக படித்து ஏழு வருடங்கள் மத்ஹபு புத்தகங்களுடன் குப்பை கொட்டிய இந்த அரை குறைகளுக்கு பிறையைப் பற்றி புரியவா போகின்றது?

    ReplyDelete
  6. பிறை விசயத்தில் கோட்டை விட்டாச்சி தயவுசைது மன்னிப்பு கேளுங்கள்

    ReplyDelete
  7. இது தொடர்பாக இன்று வரை கிண்ணியாவில் பிறை கண்டதாக சொன்ன மௌலவிகள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? தயவுசெய்து ஜப்னா முஸ்லிம் பின்னூட்டங்களை பிரசுறிப்பதை விட்டு விட்டு இது விஷயத்தில் சம்பந்தப்பட்டசகோதரர்களை தொடர்பு கொண்டு உண்மையான நிலையை சமுத்திற்கு வழங்க ஆவான செய்யுமா?

    ReplyDelete
  8. Brother Ramzan ramlan
    Nalla karuththu
    Naan ithai veru sila idangelilum pirasurikkiren

    ReplyDelete
  9. Jafna muslim thalamum shila poothu unmeykku idam kodukkiraarhal illey.
    Pala comments kal publish panna villey pakka shaarfukku illaamal nadanthu konraal valarum inshaa allah

    ReplyDelete
  10. ஒரு ஊரில்(பிரதேசத்தில்) பல முஸ்லிம்கள் பிறையை கண்டுள்ளார்கள். அதிலும் அ.இ.ஜ.உ.சபையில் அங்கத்துவம் வகிக்கும் உளமாக்கள் கூட கண்டுள்ள நிலையில் அவர்களின் சாட்சியத்தை கேட்டு அறிந்துவிட்டு அதன் பின்பும் எதோ வானிலை நிபுனர்(?) கள் சொன்னார்கள் எனக்கூறி அந்த சாட்சியங்களை நிராகரித்துவிட்டு,, வாருங்கள் நாம் ஒற்றுமையாய் நாளை பெரு நாள் கொண்டாடுவோம் என்றால் எந்த தன்மானம் / சுய கெளரவம் உள்ளவன் அதை ஏற்றுக்கொள்வான்?

    ReplyDelete
  11. Dear Ramzan Ramlan... neenga mouwlavidu soneenga, padichavanga mowlavi maar ippadi nadakka maayarhel nu ninaikren, public page la ungala vida periya oru mufthiku (not one.. a group of ulama mufthi) edira pesa enda rights um illa... aver paavem senjirunda ada allah paarthukuwan.. ada vituutu society kollapa venaam... ungalaala mudinja pora kandadu 100% surenu quran sathiyam panne eluma... but adu poi ya irunda adu ada vida periya paavem ..

    ReplyDelete
  12. Paawam inda ramza ramlan iwarukku ACJU oru angattuwam kodungal nandraha paadikkappattu irukkuraaru ( tannaittane moulavi endru sollikkondum Quran hadeesai tan pinpatruwom endru sollikkondum tiriyum oru yooda kaibommaik koottam tiriwadu yaawarum Arindade !?!?) Nandri Jaffna Muslim

    ReplyDelete

Powered by Blogger.