Header Ads



பிறை விவகாரம் குறித்து ஹஜ்ஜுல் அக்பர்

வியாழன் பெருநாளா...? நோன்பா...? முக்கால் நாளாக முஸ்லிம் சமுகம் கேட்டு ஓய்ந்த கேள்வி இது. புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை விடையின்றித் தவித்த இக்கேள்விக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி முற்றுப்புள்ளி வைக்கிறார். அது ஒரு அருமையான விளக்கம். அந்த விளக்கத்தில் ஒரே ஒரு கேள்வியையும் ஒரு பத்வாவையும் தவிர அனைத்துக்கும் தெளிவான விடை இருந்தது. அவற்றை பின்னர் பார்போம்.

புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் முக்கால் நாள் முஸ்லிம் சமுகம் குட்டை குழம்பிய கதையாகியது. இதே போன்றதொரு பெருநாள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பும் சமூகத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தப் பெருநாள் இறுதியாக ஸஹர் நேரத்தில் அறிவிக்கப்பட்டது, திடுதிப்பாக வந்த அந்தப் பெருநாளை முஸ்லிம் சமூகம் வெகு 'விமர்சனத்துடன்' கொண்டாடியது. அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் இன்னும் எனது நினைவை விட்டு அகலவில்லை.

'ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்' என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக...

இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது, அதனை நடைமுறைப்படுத்துங்கள் என குழம்பிப் போயிருப்பவர்களுக்கு நான் கூற முற்பட்டால் இரவு முழுவதும் தொலைபேசி விவாதம் நடாத்த வேண்டி வந்திருக்கும். தற்செயலாக ஜம்இய்யதுல் உலமா விரும்பாத ஒரு வார்த்தை எனது நாவிலிருந்து  வெளிப்பட்டு விட்டாலோ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவை விமர்சிக்கின்றது என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விழைபவர்களும் இல்லாது போக மாட்டார்கள்.

எனவே குழம்பிய சமூகத்தை உரியவர்களே கையாளட்டும் என்ற நோக்கில் நான் தொலைபேசி  இயக்கத்தை நிறுத்தி விட்டேன். பேசுவதின் மூலம் வருகின்ற தொல்லைகளை விட அமைதியாக இருப்பது குறித்து வரும் விமர்சனம் பாதிப்புக் குறைந்தது என்ற கணிப்போடு...

இருப்பினும் பெருநாளா? நோன்பா? என்ற குழப்பத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.

பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.

இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இதற்கு யார் காரணம்?

பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.

சமூகம் ஹலால் விடயத்தில் கட்டுப்பாடாக நடந்து கொண்டது யாவரும் அறிந்ததே. மிகச்சிலர் ஹலால் விடயத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை வெளிக்காட்டி சமூகத்தைப் பிளவுபடுத்த முயலவில்லை.

எனினும் பிறை விடயத்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்ததையே பார்க்கிறோம். அவ்வாறாயின் ஏன் அது நடந்தது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஹலால் இனவாதிகளால் வீசப்பட்ட ஒரு கணை. அதன் பாதிப்பை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனும் உணர்ந்திருந்தான். எனவே பொறுப்பாளர்கள் விவகாரத்தை கையாளுமட்டும் சமூகம் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது. அதுமட்டுமல்ல, ஹலால் விவகாரம் ஒரு நாளோடு முடிவடைவதல்ல. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் இருப்போடு தொடர்பானதொரு பாரிய விவகாரமாகும். அதில் சமூகத்தரப்பினர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கவோ தாம் நினைத்தவாறு செயற்படவோ முன்வரவில்லை.

பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா? பெருநாள் கொண்டாடுவது ஹராமா? என்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்' என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?

சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். மூன்று வகையில் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். அந்த மூன்றுக்கும் உரிய கவனத்தைக் கொடுக்காமல் கட்டுப்படும் தன்மையை சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மாற்றமாக, தலைமைத்துவமிருக்கிறது எனவே கட்டுப்படுங்கள். அந்தத் தலைமைத்துவம் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கட்டுப்படுவது கடமையே என்று கூறி சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை.

ஒரு சமூகம் பின்வரும் மூன்று நிலைகளில் ஒரு தலைமைக்குக் கட்டுப்படலாம்.

1.அதிகாரம்

2.பக்தி சிரத்தை

3.விளக்கம்

அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லை, யாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.

பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும், ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும். இதன் போது கட்டுப்படுபவர்கள் தலைவர் சரியா? பிழையா? என்று கூடப்பார்க்க மாட்டார்கள். எங்களது தலைவர் சொல்லிவிட்டார். எனவே அது சரியாகத்தானிருக்கும் என்பதே இத்தகையவர்களது நம்பிக்கை.

விளக்கம்: ஒன்றைக் குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் விளங்கிக்கட்டுப்படுவதை இது குறிக்கும். தெளிவானதொரு விளக்கம் கிடைக்கின்ற போது சமூகத்தில் இந்த வகையான கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. இத்தகைய கட்டுப்பாட்டையே தலைமைத்துவங்கள் பெரிதும் வரவேற்க வேண்டும். தமது அதிகாரத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது தம்மீது சந்தேகம் கொள்ளாமல் கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற வகையான கட்டுப்பாட்டையோ இஸ்லாமியத் தலைவர்கள் மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.

தெளிவான மார்க்க விளக்கத்தினூடாகவும் தர்க்கரீதியான விஞ்ஞான விளக்கங்களினூடாகவும் சமூகத்தை அறிவூட்டி கட்டுப்பட வைப்பதே கட்டுப்பாடுகளில் சிறந்தது. தலைவர் வஹி அறிவிக்கப்படும் ஒரு நபியாக இருந்தால் பக்தி சிரத்தையோடு அவருக்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறுமில்லை. தலைவர் ஆட்சியதிகாரத்தைக் கொண்டவராக இருந்தால்; அதிகாரத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டுமில்லாத நிலையில் தலைவர்கள் தெளிவான விளக்கங்களை மக்கள் முன் வைத்து சமூகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே சிறந்தது.

பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...

விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.

வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?

இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.

தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.

அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.

ஜம்இய்யதுல் உலமா தலைவரின் விளக்கம் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டேன். அது சமூகத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,

'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'

சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

20 comments:

  1. Hadis kaley thuukki erindu vittu. Pilayaana mudiveyum samuuhathukku payandu perum paanmayaanavarhal poohum pookkil pooy matravarhalin mathippu petru pilayaana vatrayum shari kanru kanmuudiththanatheyum kattup pafungal enru enathu pathuvaa vey ureykiren enru neengal kuuruwathu nanraaha vilanguhirathu

    ReplyDelete
  2. மிஹச் சிறந்த ஒரு விளக்கம். உண்மையில் நேற்றைய தினம் ஏற்பட்ட குழப்பத்தை உஸ்தாத் அவர்ஹல் கூருபோன்று எமது ஜம்மியத்துல் உலமா செய்திருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது என்பதுதான் எனது கருத்தும் கூட.
    ஜம்மியத்துல் உலமா சபை தலைவரின் ;விளக்கத்தில் இன்னும் சில வினாக்களும் உள்ளது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு முதல் வானியல் அறிக்கை உள்ளது என்று கூறப்பட்டது அனால் அது இந்த நோன்பு பெருநாள் பிறையை தீர்மானிப்பதில் மட்டும் பயன்படுத்தப் பட்டுள்ளது, இதற்கு முதல் சுமார் எண்பத்தி நான்கு மாதங்கள் இஸ்லாமிய மாதக் கணிப்பீட்டில் இது பயன் பயன் படுத்த பட வில்லையா????ஏனென்றால் நேற்றுதான் இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்ள முடிந்தது....

    இந்த நோன்பு பெருநாளுக்கு பிறையை தீர்மானிக்க மட்டும் இவ்வானியல் அறிக்கைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது???ஏற்கனவே தீர்மானித்தபடி நோன்பு பெருநாளை கொண்டடுவதர்கா????

    பதினெட்டு முஸ்லிம் வானியல் அறிந்ஜர்களின் எதிர்வு கூரளையும் நிராஹரிக்கும் வஹையில் அரபு நாடுஹளில் பிறை தென்பட்டுள்ளது அப்படியாயின் இலங்கையில் மட்டும் பிறை தென்பட முடியாது என்று இந்த வானியல் எதிர்வு கூறல வைதுக்கொண்டு எவ்வாறு முடிவெடுக்க முடியும்????

    ReplyDelete
  3. யா அல்லாஹ் நயவஞ்சகர்களிடமிருந்து இலங்கை முஸ்லிம்களைப் பாதுகாப்பாயாக.

    ReplyDelete
  4. good positive thinking i appreciate it.I think insha allah acju must consider osthads advice

    ReplyDelete
  5. jazakumullahu haira......your artifical send A.C.T.J leader Rizvi Mufthi.

    ReplyDelete
  6. இதுல நீங்கள் என்ன சொல்ல வாரிங்க விஞ்ஞான விலக்கம் செய்ய வேண்டும் என்பது சரியான முடிவுஎன்றா?இல்லை நீங்களும் ஒற்றுமைக்காக அல்லாஹ் ஸுலின் வழியில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றா? இல்லை நீங்கள் ஒழிந்து கொண்டது சரியான விடய நியாயம் என்றா?இதில் நீங்களும் ஜம்மியத்துல் உலமாவும் ஒரே வேலையை செய்ததை நீங்களும் சரிகாண்கிறீர்களா சமுதாயம் குழப்பத்தில் இருந்தது நீங்கள் அறிந்தும் தெளிவை சொல்லி சமுகத்தை ஏன் நீங்கள் அறிவுட்டவில்லை?

    ReplyDelete
  7. Even though metropolitan departments says that impossibility of moon sight, still they should ask public to see the moon because who can guarantee the science. If Allah wish everything is possible.

    ReplyDelete
  8. நாட்டின் பல பகுதிகளில் உலமா சபையின் தீPர்மானத்திற்கு எதிராக பொது மக்களை பெருநாள் அனுஷ்டிக்கத் தூண்டியவர்களும் அந்த உலமா சபையின் கிளைகளை பிரதிநிதித்துவப் படுத்தும் உலமாக்களே
    எனவே பொமக்கள் மீது உலமா சபைத் தலைவர் குற்றம் சொல்வது தவறாகும் முதலில் உங்கள் உலமாக்களுக்கு மார்க்கத்தைப் படித்துக் கொடுங்கள்.

    ReplyDelete
  9. Ameer avarkele.. siru vileekem thevai, palar kannal kandu unmai paduthum saatchiyem, science kanippal niraakarikke mudiyumaa? or science kanippil pilai riukemudiyumaa? science oru anumaaneme enre adippadayi evvaru ithen pothu arivu reethiyaage mudivu edukke vendum.melum statementil Argentina, chilli ponre naadukalai thavire perumpaalaane naadukelil pirai theriyaathu enru rizvi mufthi solli irunthaar. annal maaraake saudi , qatar, Sri Lanka utpade pala nadukelil pirai thenpattethu. innilayil ethai naam muthammai saatchiyaake kolle mudiyum. ithai Quran n Hatheeth adipadaiyil vilekumaaru thaalmayuden kertukkolkiren. ithu ponru kurreviyel sattethil evvaaru theerpu solle mudiyum enre villekem thevai padukirethu?sarru vilakkamaage solveerkalaanal mikunthe pireyosanamaage irukkum.

    ReplyDelete
  10. Did any body get, what he is try to express? Instead of safe garding your alocated slot in the ACJU, Could you please let us know who is right in this scenario. ACJU or the Kinniya Jamiyathul Ulama led by one of your loyal guy Hidayathulla(Naleemi)

    ReplyDelete
  11. Only the solution: we need an intellectual body with Astrologists,geographies, lawyers,doctors,engineers....etc for ACJU to guide our society for varies problems facing in sri lanka while ACJU got only Arabic books knowledge which is far from modern astrology and geographic knowledge. Also Islamic banking there got no even a single Alim to Analyze and re search but we got intelligent from our society but not an Alim and non Muslims too. Do ACJU will consider on an intellectual body?

    ReplyDelete
  12. மதிபிட்கும் கண்ணியத்திக்கும் உரிய ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே,

    இதற்கு தான் பெயர் மதில் மேல் பூனை. பிரச்சினை எல்லாம் முடிந்ததன் பின்னால் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்கும் போக்கை கடைப்பிடிப்பது ஆரோக்கியமானதுமல்ல எதிர்காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை அற்ற தன்மையை ஏற்படுத்தும்.

    ரிஸ்வி முப்தியின் முடிவு சரியானது தான் ஆனால் பிந்தி எடுக்கப்பட்டுள்ளது என்று கூரும் நீங்கள் ஒரு கேள்வியையும் வைத்துள்ளீர்கள். இது ஒரு இரட்டை வேடம் போல் தெரிகிறது.

    மதிபிட்கும் கண்ணியத்திக்கும் உரிய ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே,
    கிண்ணியா ஜம்யதுல் உலமா மீது அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபைக்கு நம்பிக்கை இல்லையா..?? கிண்ணியா ஜம்யதுல் உலமா சபையில் இருக்கும் மெளலவி மார் தகுதி அற்றவர்களா..?? இல்லை பிறை கண்ட விடயத்தில் பொய் சொன்னார்களா..?? வழி நடாத்தும் மெளலவி மார்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஏற்பட்ட குழப்பத்துக்கு, நீங்கள் ஒன்றுமே புரியாத சமூகத்தை நூரு வீத பிழை என்று எதை அடிப்படையாக வைத்து கூருகிரீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

    தயவு செய்து தெளிவு படுத்திவீர்களா...!!!

    மிகவும் நல்ல பதிவை செய்தவர்களான Saafi Rahman, Nizar,Nurullah,
    Fathima Farsana (Very demanded question ) எனது நன்றிகள்.

    ReplyDelete
  13. Ameerukku kattup paduvathu enbathu antha ammeer quran hadis il irundu mudivu edukkum varey. Ashathiyathukku thuney poohum ameerukku kattup pattaal naraham enra hadis ey maranda neengalum asathoyathukku thuney pooha kalam erangi yulleerhal
    ungal mathippey weythu neengal mavnamaaha iruppathu nallathu. shaththiyaththey solla mudiyaathu saththiyathey solhiravar haley ethirthu seyal padaathir.
    NAANGAL NAVEENA VINGHAANAM USE SEYYA MAATTOOM ENRU RIFTHI MUTHTHI SOLHIRAAR. PIREY EVALO NERAM ITHTHINA MANIKKU ENRU KANITHTHATHU NAVEENA VINGHAANAM ALLAYA?
    MUMINAANA MUSLIM GAL 10-20 PER WELLAAHI ENRU PIREY KANDATHEY SOLLIYUM HADISEY NIREY WETRAAMAL HADIS EY POYYAAKKI ANTHA THAHAAL SONNAVARHALAYUM POYYAAKKI VINGHAANATHUKKU MUKKIYATHUVAM KODUTHU IRUPPATHEY SARI KAANGIREERHAL. EVADATHIL AVAR SEYTHA THAVEREY UNARNTHU MANNIPPU KETRAAL VEYRIYUNRU ENBATHEY MARUTHTHU UNMAYAAHA PERUNAAL EDUTHTHAVARHALEY THAWBA SEYYA VENDUM KALAA SEYYA VENDUM ENRU SOLHIREERHAL.
    WETRUMAYIL OTRUMEY ENRA JAMMIYATHUL ULAMAAVIN KOORIKKEYEY AVARE MEERUHIRAAR. THALEYVARAAM THALEYVER IPPADI THLEYVAR THEVA THAANAA?

    ReplyDelete
  14. Dear Kuruvi

    First read the article you have answer on it.....don't make a group without understand as usual.....

    ReplyDelete
  15. எதிர்ப்பே இல்லாமல் தஃவா செய்ய கிளம்பியிருக்கிறார் உஸ்தாத்....barakallahu feek...

    ReplyDelete
  16. மாஷா அல்லாஹ் காலத்தின் தேவை கருதி மிகச்சிறந்த தெளிவை வழங்கிய மௌலவி ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுக்கு ஜெசகள்ளஹு ஹைராஹ், இந்த சிறந்த கருத்தை இயக்க காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மறுத்துரைப்பது அறிவுள்ள ஒரு மனிதனுக்கு சிறந்ததல்ல என நினைக்கிறேன். யாருடைய்ய கருத்தாக இருன்தாலும் அந்த கருத்தை நடுநிலையாக இருந்து நோக்குவது தான் ஒரு முஹ்மினுடைய்ய சிறந்த பண்பாகும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். சில சகோதரர்கள் வாசித்துவிட்டு தலை கீழாக விளங்கிக்கொண்டு இங்கே கருத்துத்தெரிவித்திருக்கின்றனர். இது சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதோடு அந்த சகோதரர்களின் அறிவில் உள்ள குறைபாட்டையே காட்டுகின்றது. அல் ஹாபில் இர்ஷாத்

    ReplyDelete
  17. ok this is good report.

    but there is no any openion from you about what the communitty should take the standing in this situation. please tell your openinon or advice to the communitty for their double standing.

    other thing is, why did not ameer guide the jammiyathul ulama in this situation? please consider.ok

    ReplyDelete
  18. Dear all brothers. in this situation we must unity. we are minority in this county and we divided in political and religion practice. we should not have many groups in our society. our all groups must united. we should follow one leader. it the beauty of Islam and Muslim ummah. we believe one God, one last prophet. one book (quran). but we are following many leaders. each and every leaders they are strong in their way. now no prophet will come. so we should obey our leader there will be some (+ & -) errors. the leaders not prophet or angel. many leaders divide the community. in this time all the wold very clear Muslim divided. Muslim countries divided. non Muslim are laying with Muslim. they found our weak point. we all follow one leader if the leader did mistake Allah punish him only. if the leader make mistake correct him only proper way. our community must united. in this minority country and this situation. thanks.

    ReplyDelete
  19. well done ameer, future any issue switch off the phone

    ReplyDelete
  20. Dear Ameer,

    You have indirectly pointed two mistakes in the speech delivered by the ACJU. It is your responsibility to talk on the actual reason that divided the community of Muslims in Sri Lanka to two teams.

    This is the important Question that has to be answered in order to avoid problems and confusions that may arise in future.

    "Is verifying the sighted moon using science, calculation or projections are anywhere prescribed in Islam??? "

    And Almost ALL the Scholars have the opinion that Astronomy and calculations are nothing

    This matter shall be more important to talk and that shall make the brothers and sisters in Islam in Sri Lanka understand who did the mistake and how to deal with it,


    NOTE 1:

    I could guess sometimes that you might see this some days and please do not mind to respond thinking that ACJU might go wrong!!

    Fear Allah for he give he should be feared

    NOTE 2:
    Please reply to Dr.Aqil Ahmad Sharifudeen's article regarding the new moon sighting, I hope he is a member of jamathi islami and he had been the Naazin for Akkaraippatu some years back to the best of my knowledge.


    Brother in Islam,
    TheWayOfMuhammmadh(PBUH)

    ReplyDelete

Powered by Blogger.