Header Ads



அழகாக இருந்தமையால் பதவியை இழந்த ஈரானிய பெண்

(Inne) ஈரானின் காஸ்வின் நகரில் மிகவும் அழகாக இருந்ததால் ஒரு பெண் கவுன்சிலர் பதவியை இழந்துள்ளார்.

ஈரானின் காஸ்வின் நகராட்சிக்கான கவுன்சிலர் தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்தலில் நினா சியகாலி மொராடி(வயது 27) என்ற பெண் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை, 10000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

ஆனால் இவர் வெற்றி பெற்றாலும் பதவிக்கு தகுதியுடையவர் அல்ல என்று நிராகரிக்கப் பட்டார். அதற்கான காரணம் இப்போது வெளியாகியுள்ளது.

அதாவது, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், இப்படிப்பட்ட பெண்கள் இந்த வேலைக்கு பொருத்தமாக இருக்கமாட்டார்கள், கேட் வாக் போகும் மாடல்கள் இதுபோன்ற பதவிகளுக்கு தேவையில்லை" என்று நிராகரித்துள்ளதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. Ithey election itku munbu kuuriyirukka laame.

    ReplyDelete

Powered by Blogger.