திருமணத்திற்கு சென்றவர்களை அடித்துச்சென்ற வெள்ளம் - 27 பேர் வபாத்
உலகில் உள்ள ஏழ்மை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஏமன் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரு திருமண கோஷ்டியினர் மணமகளின் புகுந்த வீட்டிற்கு 3 வாகனங்களில் சென்றுக்கொண்டிருந்தனர். மணமக்களின் கார் முன்னால் செல்ல அதனை தொடர்ந்து 3 வாகனங்கள் பின்னால் அணிவகுத்து சென்றன. அவற்றில் பெண்கள், குழந்தைகள் உள்பட 68 பேர் அமர்ந்திருந்தனர்.
டைஸ் மற்றும் இப் மாகாணத்திற்கு இடையே உள்ள சமவெளிப் பகுதி வழியாக வாகனங்கள் சென்றபோது திடீரென பெருக்கெடுத்தோடி வந்த வெள்ளம் வாகனங்களை அடித்துச் சென்றது.
வெள்ள நீரில் மூழ்கி மூச்சுத்திணறி புது மாப்பிள்ளை உள்பட 27 பேர் பலியாகினர். 41 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் மணமகள் உள்பட 8 பேரை மீட்ட மீட்புப் படையினரை மற்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment