Header Ads



முர்ஸிக்கு ஆதரவான ஆர்பாட்டத்திற்கு நடுவே திருமணம், உதைப்பந்தாட்ட போட்டி

பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவாக முர்சி ஆர்ப்பாட்ட முகாமான கெய்ரோவின் ரபா அல் அதவியாவில் ஒரு ஜோடி திருமண பந்தத்தில் இணைந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் முன்னிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான மேடையில் ஏறி பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்சிக்கு ஆதரவு வெளியிட்டனர்.

எகிப்தில் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பது குறித்து அரசு அச்சுறுத்தல் விடுத்துவரும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கிடையில் கால்பந்து தொடர் ஒன்றையே நடத்தியுள்ளனர்.

ரபா அல் அதவியாவில் முகாமிட்டிருக்கும் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் என்னஹ்தா சதுக்கத்தில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் இந்த கால்பந்து போட்டி இடம் பெற்றது.

தெற்கு கெய்ரோவின் கிசாவின் என்னஹ் தா சதுக்கத்திலேயே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் இந்த கால்பந்து போட்டி நடந்தது. இதில் ரபா அல் அதவியா அணி என்னஹ்தா அணியை 5-2 என வீழ்த்தியது. இந்த போட்டியை பெரும் ஆரவாரத்துடன் முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்வையிட்டனர். Thina

No comments

Powered by Blogger.