Header Ads



தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கலாம் - சிம்பாப்வே ஜனாதிபதி அறிவுரை

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 61 சதவீதம் வாக்குகளை பெற்ற ராபர்ட் முகாபே (வயது - 89) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

33 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மோர்கன் ஸ்வன்கிரய் 34 சதவீதம் வாக்குகளை பெற்றார். 

வாக்குச் சாவடிகளை கைப்பற்றியும், கள்ள ஓட்டுகளின் மூலமாகவும் ராபர்ட் முகாபே வெற்றி பெற்று விட்டதாக குற்றம் சாட்டும் மோர்கன், தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளார். 

இந்நிலையில், ஜிம்பாப்வே விடுதலை போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தலைநகர் ஹராரேவில் நடைபெற்றது. 

தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதன் முறையாக இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராபர்ட் முகாபே பங்கேற்றார். 

கூடியிருந்த பொதுமக்களிடையே பேசிய அவர், 'யார் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ?.. தங்களை யார் ஆட்சி புரிய வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக முடிவெடுத்துள்ளனர். 

எங்கள் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாதவர்களும், தோல்வியால் காயப்பட்டுள்ளவர்களும் விரும்பினால் அவர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கலாம்' என்று கூறினார்.

1 comment:

  1. Long live Mr Mugabe!Many wishes from Sri lanka.

    ReplyDelete

Powered by Blogger.