அம்பாரை மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவுறுத்தல் கருத்தரங்கு
(A.G.A.Gaffoor)
அம்பாரை மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவுறுத்தல் கருத்தரங்கொன்;று கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் தலைமையில் (17.08.2013) சனிக்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது. நிகழ்வை சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும், அருகில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண, கல்முனை,அக்கரைப்பற்று பிரிவுகளுக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன் ஆகியோர் நிற்பதையும், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண ஆகியோர் அறிவுறுத்தல்கள் வழங்கி உரையாற்றுவதையும்;, கலந்து கொண்ட அம்பாரை மாவட்டத்தில் கடமையாற்றும் தலைமைப்பீட பொலிஸ் பரீட்சகர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் பரீட்சகர்கள், உப பொலிஸ் பரீட்சகர்கள், உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.


Post a Comment