Header Ads



கல்முனை ஸாஹிரா வளர்ச்சியில் பழைய மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்

கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என சிரேஷ்ட கல்விமானும் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளருமான எஸ்.எச்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இதற்காக பழைய மாணவர்கள் எங்கிருந்தாலும் பழைய மாணவர் சங்கங்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 'ஆனால் எமது சொந்த பயன்களை ஒருபோது இந்த பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக அனுபவிக்கக் கூடாது. அவ்வாறு நினைத்தால் பழைய மாணவர் சங்கம் செயழிலந்துவிடும்' எனவும் எஸ்.எச்.எம்.ஜெமீல் தெரிவி;த்தார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை ஏற்பாட்டிலான இப்தார் ஒன்றுகூடல் கடந்த வாரம் மியாமி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய எஸ்.எச்.எம்.ஜெமீல்,

கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு நீண்ட வரலாறு உள்ளது போன்று அதன் பழைய மாணவர் சங்கத்திற்கும் நீண்ட வரலாறு உண்டு. அதேபோன்று தான் இந்த கொழும்புக் கிளைக்கும் நீண்ட கால வரலாறு உள்ளது. அவ்வாறான இந்த கிளை மீண்டும் புனரைமக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். அந்த வகையில் மூத்த உறுப்பினர்களுடன் இணைந்து சிறந்த முறையில் இந்த கிளையினை கொண்டுசென்று கல்லூரியின் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். 

அத்துடன் கல்லூரி நிர்வாகம், பழைய மாணவர் சங்க தாய்ச் சங்கம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்க இந்தக் கிளை கொண்டிருக்க வேண்டும். அந்த அமைப்புக்களினை ஒருபோதும் மீறிச் செல்லக்கூடாது. 

இந்தக் கிளையினை கொண்டு செல்வதற்கான விமர்சங்கள் அவசியமாகும். எனினும் குறித்த விமர்சங்கள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர அழிவுக்கானதாக இருக்கக்கூடாது.  இந்த விமர்சங்களின் ஊடாகவே கிளையினை சிறந்த முறையில் கொண்டு செல்ல முடியும்.

பாடசாலைக்கான அதிபர் நியமனம், முஸ்லிம்களுக்கான தனி பல்கலைக்கழகம், தனி மாவட்டம் போன்ற விடயங்களுக்காக ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க போராடியுள்ளது. இது போன்று எதிர்காலத்திலும் இந்த கொழும்புக் கிளை செயற்பட வேண்டும்.

கல்முனை ஸாஹிராவின் அதிபர்களாக பழைய மாவணர்கள் இருந்துள்ளனர். இந்த பாரம்பரியம் எம்.சீ.ஆதம்பாவா முதல் இன்றுள்ள ஏ.எம்.ஆதம்பாவா வரை தொடர்கின்றது. இதற்கு மத்தியில் ஹுசைன், முஸ்தபா மற்றும் இஸ்மாயில் போன்ற பல பழைய மாணவர்கள் இந்த பாடசாலையின் அதிபர்களாக இருந்துள்ளனர். இந்த பாரம்பரிய செயற்பாடு தொடர வேண்டும்' என்றார்.

சிரேஷ்ட கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராக இரண்டு தடவைகள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.