நிந்தவூரில் அடிக்கடி இயங்க மறுக்கும் ATM இயந்திரம்
(சுலைமான் றாபி)
இலங்கை வங்கியின் நிந்தவூர் கிளையில் காணப்படும் ATM இயந்திரம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதும், அதன் சேவை வலையமைப்பு தடைப்பட்டிருப்பதும் தொடர்கதையாய் அமையபெற்றுள்ளது . இதனால் அவசர தேவையின் நிமிர்த்தம் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே சேவைப்பரிசாக கிடைக்கின்றது. இதனால் தங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ள அருகிலுள்ள சாய்ந்தமருதிற்கோ அல்லது கல்முனைக்கோ செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது!!
இதேவேளை நிந்தவூரில் அதிகமான தனியார் வங்கிகள் காணப்படுகின்ற போதும் இலங்கை வங்கிக்கு மட்டுமே இந்த சிக்கல் நிலை ஏற்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்களின் நலன்களைக் கருதிற்கொண்டு பெருநாள் காலங்களிலாவது ATM இயந்திரம் இடைநிறுத்தப்படாமல் இயங்கி வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைகளை வழங்க வைப்பது வங்கியின் தார்மீகக் கடமையல்லவா?

Post a Comment