றிசாத் பதியுதீனின் வீட்டில் பொலிஸார் அதிரடி சோதனை
புத்தளத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் உம்மாவின் வீட்டிலும், மன்னார் மற்றும் வவுனியாவில் றிசாத் பதியுதீனின் வீட்டிலும் பொலிஸார் ஒரேதடவையில் அதிரடி சோதனைகளை மேற்கொண்ட விவகாரம் தற்போது முதற்தடவையாக வெளியே கசிந்துள்ளது.
அண்மையில் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரத்தை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் றிசாத், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைதுசெய்யப்படாமை உள்ளிட்ட காரணங்களை கூறி பொலிஸ்மா அதிபர் இளங்ககோன் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.
அரசியல் வட்டாரங்ளில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். யாருடைய உத்தரவின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை.
அதேவேளை தன்னுடைய வீட்டில், தனது அனுமதியோ அல்லது நீதிமன்றத்தின் உத்தரவின்றியோ பொலிஸார் மேற்கொண்ட இச்சோதனை நடவடிக்கை குறித்து அமைச்சர் றிசாத் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்ததற்கான ஆதாரங்களின் சாட்சிகளாக முஸ்லிம் சமூகம் உள்ளதாகவும், இவற்றுக்கு மேலதிகமாக ஓடியோ, வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் இவற்றை தாம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இவற்றுக்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, றிசாத்தின் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை குறித்து தான், பொலிஸ்மா அதிபரிடம் வினவுவதாக பதில் வழங்கியுள்ளார்.

ithuvu nadakkum, ithatku melayum nadakkum...............
ReplyDeleteMr.Risath unkalukku ellam romba nella paadam ithu...
iniyavathu thirunthi muslimkalukkaha onrusernthu roumitha kurali elupunkal