பிரான்ஸில் பள்ளிவாசலை தாக்க திட்டம்
(Thna) பிரான்ஸில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந் நாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
பிரான்ஸின் லியோன் நகர விமானத்தளத்தில் பணியில் இருந்த 23 வயது இராணுவ வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தீவிர வலதுசாரி சிந்தனை கொண்டவர் என உள்துறை அமைச்சு விபரித்துள்ளது.
பிரான்ஸில் தீவிரக் குழுக்களின் செயற்பாடு அண்மைக் காலத்தில் உக்கிரமடைந்துள்ளது. எனினும் இவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் பொறுமைக்கு இடமில்லை என்று உள்துறை அமைச்சு எச்சரித்துள்ளது. லியோன் நகருக்கு அருகில் கைது செய்யப்பட்ட மேற்படி இராணுவ வீரர் மீது உள்நாட்டு உளவு பிரிவான டி. சி. ஆர். ஐ. விசாரணை நடத்தி வருவதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
இதில் நோன்புப் பெருநாள் முடிவடைந்ததை தொடர்ந்து லியோனின் புறநகர் பகுதியான வெனிசியக்ஸில் இருக்கும் பள்ளி வாசல் மீது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட பிரான்ஸில் தீவிர வலதுசாரி களின் செயற்பாடு அதிகரித்துள்ளது அந் நாட்டு அரசுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பிரான்ஸின் மூன்று தீவிர வலது சாரி குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

The Governing people of Sri Lanka! Learn from French Interior minister how he going to save his country from the racist activities.
ReplyDelete