Header Ads



நிந்தவூரில் ஜப்னா முஸ்லிம் ஊடக அனுசரணையில் இடம்பெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டி


(சுலைமான் றாபி)

உலக நடப்பு விடயங்களை உடனுக்குடன் தரும் உலக முஸ்லிம்களின் உண்மைத்தளமான  ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் ஊடக அனுசரணையில் நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக்கழகம் நடாத்தும் அணிக்கு 07 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 22.08.2013ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில்ஆரம்பமானது. கழகத்தலைவர் ஏ.எச். சபீர் மௌலவி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எல்.அனஸ் அஹமட், மனிதவள முகாமைத்துவ அதிகாரி ஏ.றியாஸ்டீன், வர்த்தகர் எம்.சி.சுபைர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தலைவர்கள், போட்டி நடுவர்கர்கள் ரசிகப்பெருமக்கள் என அனைவரும் கலந்து போட்டிக்கு மெருகூட்டினர். 

இதே வேளை நிந்தவூரில் இடம்பெறும் மின்னொளி போட்டிகளில் இந்தப்போட்டி 04வது இடத்தினை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த   சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 26.08.2013ம் திகதி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 



2 comments:

Powered by Blogger.