Header Ads



ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் நான் தூங்கவில்லை - அமைச்சர் றிசாத்

கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கிய காடையர் கூட்டம் குறித்த ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையிலும், அதுபற்றிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்ந்துவருவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார், இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்ற கவலை என் மனதில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் சத்தியமாக நான் தூங்கவில்லை. அந்த பள்ளிவாசலில் முஸ்லிம்களாகிய நாங்கள் சுஜுத்து செய்ய வேண்டும் என்ற அவா என்னிடமிருந்தது. இதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியா வந்திருந்தபோது அவரிடம் இதுபற்றி கலந்துரையாடினேன். அந்த பள்ளிவாசலை அகற்ற வேண்டியதில்லை என் அப்போது ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கினார்.

பின்னர் நானும் ஹுனைஸ் பாருக் எம்.பி.யும் கிரண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கு சென்றோம். அங்கிருந்தபடி பௌததசாசன அமைச்சின் செயலாளருடன் உரையாடி, அவரும் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் இயங்குவதற்கு அனுமதியளித்திருந்தார். இருந்தபோதும் காடையர்கூட்டம் வெறியுடன் வந்து கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை பதம் பார்த்துள்ளது. அந்த பள்ளிவாசல் தாக்கப்பட்ட பின்னர் நான் அங்கு சென்றபோது எனது மனம் வேதனையில் துடித்தது. நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது.

எப்படியும் இந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுத்து செய்ய வேண்டுமென என் மனது விரும்பியது. இதுபோன்றே முழு சமூகமும் விரும்பியது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் முயன்றனர். ஆனால் பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லாம் மாறி நடந்துவிட்டது. எனக்கு வந்த ஆத்திரத்திற்கு பொலிஸ்மா அதிபரை திட்டித் தீர்த்தேன். ஆத்திரப்பட்டேன். மற்றும் சில முஸ்லிம் அரசியல் வாதிகளிடமும் இந்த ஆத்திரம் இருந்தது. இப்போதும் அந்த கவலை என்னிடம் உள்ளது.

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சூத்திரதாரிகள், அந்த காடையர் கூட்டத்தைத் தடுக்காத பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை குறித்து ஆராயப்படுகிறது. முஸ்லிம் சட்டத்தரணிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்,

9 comments:

  1. Are kidding Muslim community???? while you consolidate your position in Rajafackers & Co, also you are puting your brother also for perks and privilage. Dont do crocodile tears. If you are genuine you sould have called for a open debate in parliment by this time would have thrown your minister position and resigned then yes we can belive you are there for community. You guys ideal for licking shoes of Rajapackshes.

    ReplyDelete
  2. வார்த்தையில் மட்டும் சொன்னால் போதாது செயல் படுத்துங்கள் உங்கள் பின்னால் நாம் இருப்போம்

    ReplyDelete
  3. மறுமையை நினைத்து விடு மரணத்தை மறந்து விடு உனக்கு நாம் இருபோம் துணையாய் நம் அனைவருக்கும் இறைவன் துணை புரிவான் [في سابيليلله ]

    ReplyDelete
  4. Rishad just think as a minister how you screw the tamils in northern province.....

    ReplyDelete
  5. தப்புச் செய்தவனுக்குத் தூக்கம் வருவதில்லை!!! இருந்தும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் மனசாட்சி மீதமிருக்கிறது என்பதை உங்கள் நித்திரையின்மை நியாயப்படுத்தி இருக்கிறது.

    பாப்போம்... வெற்றிலையில் வெறும் சுண்ணாம்பாய் இன்னும் எத்தனை நாளைக்கு ஒட்டி இருக்கப் போகிறீர்கள்??????

    ReplyDelete
  6. இந்த காடையர்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால், மீன்டும் இதேபோல் வன்முரைகளை துனிச்சலுடன் செய்வார்கள்.

    ReplyDelete
  7. Eppovachum puriutha Minister Janathipethien utherevathem eppadi endu??????


    Why you did not publish my any Comments. What do you expect from viewers?
    don't publish one side comment?

    ReplyDelete
  8. மனாரில் ஆர்பாட்டம் நடெத்தியதட்கு எவ்வளவு வேகமாக கைது பண்ணினார்கள் அதேவேகம் அல்லாஹ்வின் இல்லம் உடைத்தவர்களுக்கு இல்லாமல் போனது என்ன?கைது பண்ணும்வரை தூங்கக்கூடாது சேர் மரெந்து தூங்கிநிங்க போட்ட தாராகுடிச்சிரும்.

    ReplyDelete
  9. we make Dua if you really work for the well being of the Ummah.

    ReplyDelete

Powered by Blogger.