பறகஹதெனிய பள்ளிவாசல்களுக்கு முன்னுள்ள பதாதைக்கு பொலிஸ் பாதுகாப்பு
(இ. அம்மார்)
பொது பல சேனாவின் கூற்றுக்கு ஏற்ப பறகஹதெனியவிலுள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் உள்ள அமைதியாகச் செல்லவும் என்ற விளம்பரப் பலகையை அகற்ற வந்த பொலிஸாரை அதைப் பாதுகாக்குமாறு குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து விடுத்த வேண்டுகோளை அடுத்து அதற்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் பிரதான வீதியில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் அமைதியாகச் செல்லவும் என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பலகையை மாவத்தகம பொலிஸார் 12-08-2013 மு.ப 10. மணி அளவில் அகற்றுவதற்காக வருகை தந்து அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் பிரதேசத்தில் ஒரு பதற்ற நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவத்தகம பிரதேச சபை உறுப்பினர் யாசிம் சேர் இல்லத்தில் இந்தச் சம்வம் தொடர்பாக விசேட கூட்டம் 12-08-2013 அன்று இரவு எட்டு மணி அளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளம்பரப் பலகையை அகற்றுவதில்லை அவ்வாறு அகற்றுவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் என்று அங்கு வருகை தந்திருந்த மக்கள் மத்தியில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நெரஞ்சன் விக்கிரமசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து மக்களிடத்தில் உறுதி மொழி வழங்கினர் அத்துடன் விளம்பரப் பலகையை பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு ஏன் இந்த வம்பு என்று கோழைகளாக விட்டுச் செல்லும் எம் சமூகத்தில் வரவேற்கப்படத்தக்க எமது பறகஹதெனிய முஸ்லிம் சகோதரர்களும் அவர்களின் வீரமும், விட்டுக்கொடுப்பதென்பது நல்ல ஒரு விடயம் தான் அதற்கு ஓர் வரையரை வேண்டும். 20 பள்ளிவாசள்களை உடைத்ததற்கு பிறகும் விட்டுக்கொடுப்பா? அப்படிெயன்றால் எப்போது ஓர் முஸ்லிம் வீரனாக திகழ்வது? எப்போது அவனது உரிமைக்காக போராடுவது?. அம்மார், யாஸிர், சுமையா ரலியல்ாஹு அன்ஹும் இவர்களின் தியாகம் குத்பாக்களில் பேசி போதுமா? எதற்காக வரலாருகளை படிக்கின்றோம்? பறகஹதெனிய சகோதரர்களை போன்று எல்லாயிடங்களிலும் எமது சகோதரர்கள் தைரியமாவும், அல்லாஹ்வின் மீது தவக்கும் வைத்தும் இருந்தால் அல்லாஹ்வின் உதவி உண்டு இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteஎலக்ஷன் காலம் என்றதால கொஞ்சம் விட்டுக்கொடுப்பா?வெத்திலக்கிபொர்ர போட் பலசெனக்கு போர்ரமாதிரித்தான்
ReplyDeleteoru palagai avsiyama inimal than satham podowargal palagai vanthathu than thavaru kenaru vetta pootham vantha katha palligalukku gurante illa
ReplyDeleteசரத் பொன்சேக முதல் ஷிராணி பண்டாரநாயக வரை , இந்த அரசு அது நினைப்பதை சாதிக்கும் சண்டித்தனம் தெரிந்தும் கூட , மறுபடியும் மறுபடியும் இலங்கை யாப்பில் கூறப்பட்ட "மத சுதந்திரத்தையும்,பாதுகாப்பையும் அமுல்படுத்துங்கள்" என கோரும் எமது வேண்டுகோள்கள் அரச தரப்பில் "ஒரு குள்ள நரி சிரிப்புடன்" கேலி செய்யப்படுவதை இன்னுமா எமது சமூகமும், சமூகத்தலைமகளும் உணரவில்லை. மாற்றீடாக முள்ளை முள்ளால் எடுப்பது போல நாமும் திட்டம் வகுத்து செயல்படுவதுதான் எமக்குள்ள வழி .இதில் எவ்வகைலேனும் பெரும்பான்மையாகவுள்ள சீரிய பௌத்தர்களோ பிற மதத்தினரோ முரண்படாத எமது சட்ட ரீதியான முன்னெடுப்புகளே மேலும் ஒரு துன்பியல் நிகழ்வை தடுக்க போதுமான முன்னெடுப்பு.இல்லை வெறுமனே அவன் அடிப்பதும் நாம் அழுவதும் , பின் அடித்தவனின் அணியே வந்து ஆறுதல் சொல்வதும் நாம் அடங்கிபோவதும், பின் அதை அரசியலாக்கி பேசுவதும் ,,,,,,,எதுவும் தானாக நிகழ்ந்துவிடாது
ReplyDelete