இவன் எல்லாம் ஒரு நீதிபதி..!
மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர், கொதிக்கின்ற கோப்பியை வீசியெறிந்ததால், எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மாற்றுத் திறனாளி ஒருவர் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலப்பிட்டியவில் உள்ள பிரபலமான, உணவகம் ஒன்றின், அருகே நடந்த இந்தச் சம்பவத்தில், காயமடைந்த வசந்த என்ற 42 வயதான மாற்றுத் திறனாளியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், குறித்த உணவகத்தின் பணியாளர் அல்ல. அங்கு சில பொருட்களை வாங்கச் சென்றபோதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
குறிப்பிட்ட உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், உணவகப் பணியாளரான தனது நண்பருக்காக, வீதியோரத்தில் தனது அதிகாரபூர்வ வாகனத்தை நிறுத்தி விட்டு, காத்திருந்த நீதிபதியிடம் சென்று இவர், என்னென்ன தேவையென்று வினவியுள்ளார்.
“அப்போது வாகனத்தினுள் நீதிபதியும், அவரது மனைவி மற்றும் குழந்தையும், இரு காவல்துறையினரும் இருந்தனர்.
முதலில் உணவுப் பொதி ஒன்றைக் கொண்டு சென்று கொடுத்தேன்.
அப்போது மூன்று கோப்பை தேனீரும், ஒரு கோப்பை கோப்பியும் கொண்டுவருமாறு அவர்கள் கேட்டனர்.
நான் கொண்டு சென்று கோடுத்தேன். கோப்பியை நீதிபதியின் மனைவி உறிஞ்சிப் பார்த்து விட்டு, நீதிபதியிடம் அதைக் கொடுத்தார்.
அவர் அந்தக் கோப்பையை என்மீது வீசியெறிந்தார்” என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

Manamai illathavanallam manthiri aahuran, ithula Neethipathi mattum vithi vilakka anna.. ithuthan namathu naadu..
ReplyDelete