Header Ads



கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிசாமின் வேண்டுகோள்

(ஏ.எல்.ஜுனைதீன்) 

  கிழக்கு மாகாணத்திலுள்ள விஷேட திறன்கொண்ட அதிபர்கள், ஆசிரியர்களைத் தெரிவு செய்து அவர்களை ஜனாதிபதியினால் கெளரவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவ்வகையான ஆசிரியர்களைத் தெரிவு செய்து அனுப்பி வைக்குமாறு ஒரு மாத காலத்திற்கு முன் வலயக் கல்விப்பணிப்பாளர்களைக் கோரியிருந்தபோதும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட தெரிவுகளில் பெரும்பாலானோர் விளையாட்டுத்துறை சார்ந்தோராக மட்டுமே உள்ளனர். எமது கிழக்கு மாகாணத்தில் வேறு திறன் கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் இல்லையா? அல்லது அவர்கள் தம்மை வெளிக்காட்ட விரும்பவில்லையா? எனக் கேள்வி எழுப்பியிருப்பதுடன் தகுதியானவர்கள் உடனடியாக தமது விண்னப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். எனவும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

  இது குறித்து மாகாணக் கல்விப்பணிப்பாளர் நிசாம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

  எமது கிழக்கு மாகாணத்திற்கு தரப்பட்டுள்ள கெளரவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒதுக்கீடு 6 பேராகும். எனினும். இந்த ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட எமது கோரிக்கையை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டு அதனை 8 பேராக அதிகரித்துள்ளது.

  இதனடிப்படையில் திருக்கோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு தமிழ் அதிபர்கள், ஆசிரியர்கள் 3 பேரும் முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள்  3 பேரும் என மொத்தமாக 6 பேரும் அம்பாறை, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் சிங்கள அதிபர்கள், ஆசிரியர்கள் 2 பேரும் என மொத்தமாக மாகாணத்தில் 8 அதிபர்கள் ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கப்படவுள்ளனர்.

  எமது கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை சார்ந்தோரைத் தவிர வேறு திறன் கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் இல்லை என்று சந்தேகிக்கும் அளவுக்கு இதற்கான விண்ணப்பங்கள் குறைவாகவே எமக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன.

  எனவே, விஷேட திறன் கொண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் தமது விண்ணப்பங்களை தத்தம் வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சுடன் மாகாண கல்வித்திணைக்கள பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு உடனடியாக ஒப்படைக்க வேண்டும். என மாகாணக் கல்விப் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 comments:

  1. “விஷேட திறன்” என எதனை அடையாளப்படுத்தலாம் என கூறும் ஒரு “criteria” இருக்குமென்றால் அதனையும் பிரசுரிக்கலாமே. எமக்கு அறிந்த தெரிந்த அதிபர் ஆசிரியர்களை உள் வாங்க வசதியாக இருக்குமல்லவா, அல்லது பாடசாலை மட்டத்திலே அப்படியான விளம்பரங்களை செய்யலாமே. ஏன் என்றால் நமக்கு எதிரி வெளில இல்ல................

    ReplyDelete
  2. Who oppose ZDE of Sammanthurai will be forwarded their name list to this award. This selection done by him last year and before without any mentioned conditions.

    ReplyDelete

Powered by Blogger.