Header Ads



இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பதில் உலமாக்களின் உயரிய பணி..!

(UMAR ALI MOHAMED ISMAIL)

அரசியல் தலைவர்களை குறைகூறிக்கூறி  இதுவரை  எதுவும் நடந்தபாடில்லை அவர்களது நிகழ்ச்சி நிரலின்படி ஒரு    சொட்டும் விலகாமல் அவர்களது பாதையில் அவர்கள்  சென்று   கொண்டிருக்கின்றார்கள், கட்சிகளுக்கிடையிலான பலப்பரீட்சையில் மக்கள் பலிக்கடாவாகின்றார்கள்.உண்மையில் கூறப்போனால் இலங்கையில் உள்ள எந்த முஸ்லீம்கள் சார்பான கட்சிகளும்  பொது மக்களின் நலனை முதன்மை நோக்காக கொண்டதாக காணப்படவில்லை ,சுயநலவாத நடவடிக்கைகளின் பக்கவிளைவுகளாகவே அப்பப்போ  ஒரு சில  நன்மைகள் சமூகத்திற்கு கிடைக்கப்பெறுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.

இது இவ்வாறிருக்க நாம் ஏன் முஸ்லீம்களின்  மார்க்க ரீதியான பிரச்சனைகளை தீர்க்கும் தலைவர்களாக சன்மாக்கம் கற்ற நல்லறிஞர்களை இன்னும்  ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோம்?இந்த நாட்டில் பௌத்தர்களுக்கு ஏற்படும் பிரச்சினை பற்றி பௌத்த மதகுருக்களே பிரதானமான கரிசனை காட்டுகின்றனர்.ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்,அறிக்கையிடுகின்றனர்.இரண்டாம் பட்சமாகவே ஏனய அமைப்புக்களும்  அரசியல்வாதிகளும் அந்த விடயங்களில்  மூக்கை நுழைக்கின்றார்கள்.நாம் மட்டும் ஏன் அவ்வாறு இல்லை?ஹலால் பிரச்சினை சூடுபிடித்திருந்த நாட்களில் ஆங்காங்கே சில அசைவுகளை அவதானித்தோம் அதுவும் இளைஞர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர்.

பல்லின சமயத்தவர்களுடன் வாழும்போது ஏனைய மதத்தினருடன் ,மத  அனுஸ்டானங்களை  நடைமுறைப்படுத்தும்   போது சிக்கல்கள் ஏற்படின் அவற்றைத்தீர்க்க  சமய சட்டங்களை  அடி முதல் நுனிவரை ஆழமாக அறிந்த   அறிஞர்களே  முயலவேண்டும்   அடிப்படை நுணுக்கங்கள்  இந்த அனுஸ்டானங்களில்  எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன  என்பதனை சாதாரணமாக எல்லோரும்போல  இஸ்லாம் கற்ற  அரசியல்வாதிகள்  எல்லோராலும்  ஏகத்துவத்திற்கு  எதிரான  காபிர்களுக்கு  புரியவைக்க முடியும் என்பது இயலாத    காரியமே!

ஆரம்பத்தில் ஹலால் விடயத்தில்  ஜம்மிய்யதுல்  உலமா தட்டிப்பணிக்கப்பட்டதைத் தொடர்ந்து  அரசாங்கத்துடன் இலங்கை முஸ்லீம்கள் சார்பாக எந்தவொரு பலம் வாய்ந்த  சமயம் சார் அமைப்பும் முறையான பேச்சு வார்த்தை நடாத்தியதாக அறியக்கிடைக்கவில்லை. அரசுடன் இணைந்திருக்கின்ற  கபுறு வணங்கிகளை மட்டுமே இஸ்லாமியர்,அவர்கள் செய்யும் களியாட்டங்கள்தான் இஸ்லாமிய செயல்பாடுகள்  என்று நினைத்துக்கொண்டிருக்கின்ற  பெரும்பான்மை இன அரசியல்வாதிகளுக்கு தூய இஸ்லாம் என்றால் என்ன என்று இன்னும் எடுத்துக்கூறப்படவில்லை.

நமக்குள்ளே சுன்னாக்களை  கடைப்பிடிக்கும் முறைகள் சம்மந்தமாக   இன்னும் கெடுபிடிகளும் அடிபிடியும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.ஆனால் அங்கே   பர்ளுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தடைபோடுகின்றார்கள்.  நாம் பிரிந்து பிரிந்து சண்டைசெய்யும்போது  எதிரிகள் ஒன்றாய்ச்சேர்ந்து தாக்குகின்றனர்.பிரிந்திருக்கும் நாம் கோழைகளாக பதுங்கிக்கொள்கின்றோம்.

எனவேதான்   இஸ்லாமிய அடிப்படை நுணுக்கங்களையும், அல்குரான்மற்றும் ஹதீஸ்களையும்  கற்றுத்தேர்ந்த   பிரபலம்வாய்ந்த ஆலிம்கள்,மௌலவிகள்,அரபுக்கலாசாலையின் அதிபர்கள், அரபுக்கலாசாலையின் ஆசிரியர்கள், பல்கலைக்கழக இஸ்லாமிய பீடங்களின் தலைவர்கள்,விரிவுரையாளர்கள்   போன்றவர்கள் ஒன்றிணைந்து  கூட்டான  ஒரு அமைப்பாகி   வந்தேறு குடிகளுக்கு இங்கென்ன மதம்,இங்கென்ன பள்ளிவாசல்  என்றெல்லாம் பேரினவாதிகளால்  தொடுக்கப்படும்  எமது அடிப்படை உரிமைக்கு எதிரான கோசத்திற்கு  தக்க பதிலளிக்க வேண்டும்.

வெறுமனே கொழும்பிலே இருப்பவர்கள் மட்டும் கோசம் கொடுத்து போராடி வெல்ல முடியாது.நாட்டின் நாலாபுறமிருக்கும் மேற்கூறப்பட்டவர்கள் கட்டாயம் ஒன்றிணைந்து இலங்கையில் கேள்விக்குறியாக இருக்கின்ற இஸ்லாத்தின் இருப்பை , நிரந்தரமானதாக இடையூறில்லாததாக மாற்றவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.இந்தமைப்பு பலம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் நேரடியாக அரசு இவ்வமைப்புடன் பேசும் நிலையை இவ்வமைப்பின் பலம் ஏற்படுத்த வேண்டும்.


4 comments:

  1. Then we are to bring ulamaas only from foreign countries, becouse no in sri lanka even a single well studied aalim, all are halves,passed in primary syllabus, doing all kind of bidhaths

    ReplyDelete
  2. ரசூலுள்ளஹ்வின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடம் கிலாபத் ஆட்சி மூலம் நிரப்பபடினும் அவ்வாட்சி காலத்தினுள்ளயே குழப்பங்கள் ஆரம்பித்தாலும் பின்னாட்களில் உக்கிரமடைந்து தொடர்ந்தட்சியாக நிகழ்ந்தே வருகிறது ...இந்த நிலைமையில் நமக்கு இடையே உள்ள வேறுபாட்டிலும் சில கருத்தொற்றுமை காண முயற்சிகள் மேற்க்கொண்டாலும் கபுறு வணங்கிகள்,சலபிகள், வகாபிகள் என்று வரிந்து கட்டி பொருதும் நிலையில் உலமாக்கள் என்னதான் செய்வர் ?அவர்களிடையேயும் கருத்து முரண்பாடுகள் இந்நிலையில் சிலைவணங்கிகள் இதை நன்றாகவே பயன்படுத்துகின்றனர்,BBS உம் இதனை நன்கு பயன்படுத்த வக்கற்ற அரசியல் தலைமைகளும் சோரம் போன நிலைமையில் சொகுசை அனுபவித்து ...சமூக பிரக்ஞை அற்றே உள்ளனர்

    ReplyDelete
  3. காத்தான்குடி நகர சபையின் ஆளுந்தரப்பு அரசியல் குஞ்சுகளுக்கே பயந்து போய் 'வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கலாம்' என்று 'பத்வா' கொடுத்த காத்தான்குடி உலமாக்கள் யார்? என்று காத்தான்குடி ஜ.உ. சபையினராலோ அல்லது அ.இ.ஜ.உலமா சபையினாலோ இதுவரை துணிந்து கேட்டறிய முடியவில்லை.

    நகர சபை வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கியதால் இப்போது காத்தான்குடி மக்கள் பலரும் வட்டிக்குப் பணம் செலுத்தி வாகனம் வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை இன்று கூட கலாச்சார மண்டபவளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் "வாகன விற்பனை" நடவடிக்கையில் உலகம் கண்டறியலாம்.

    இப்படியான நிலைமையில் தேசிய அரசியலிலும் உலமாக்கள் இறங்கினால் அனைத்து ஹறாம்களையும் ஹலால் என்று அரசுக்குப் பயந்து 'பத்வா' கொடுக்கும் நிலை உருவாகி விடும். அழ்ழாஹ் பாதுகாப்பானாக!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. dowaaku ulama zikir ulama ulama ulama appa allah yarunga

    ReplyDelete

Powered by Blogger.