Header Ads



குருநாகலில் பொதுபலசேனா கூட்டம் - பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

(இ. அம்மார்)

பொதுபல சோனவின் பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதைக் கருத்திற் கொண்டு குருநாகல் நகரிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு குருநாகல் மாவட்ட ஸ்ரீ சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா  அதிபரிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து தற்போது குருநாகல் நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது பல சோனவின் ஒரு பதாதையொன்று நேற்றிரவு இனந் தெரியாத நபர்களினால் தீ மூட்டப்பட்டதை அடுத்து இந்தப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு அப்துல் சத்தார் வேண்டுகோளை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து குருநாகல் நகரில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

கிராண்பாஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு  அவர் சிரேஷட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

பொது பல சேனாவினால் நடாத்தப்படும் பொதுக் கூட்டம் குருநாகல் நகரில் ஞாயிற்றுக்கிழமை பி. ப 2.00 மணிக்கு சத்தியவாதி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


3 comments:

  1. een summa irukkum palliwayalkalukku pathukappu walanga wendum? kadayarkalin koottatthai een thadutthu niruttha mudiyadu? aniyaya kararkalai ithu melum waluppadutthum allawa!

    ReplyDelete
  2. Yaa Rab, Innarhalai matrividu, illayel thalthividu.

    ReplyDelete
  3. பயங்கரவாதத்தை அழித்தொழித்தது என்று கூறுவது அரசாங்கத்தின் பொய்யாகும் ஏன் என்றால் பொத பல சேனாவை இன்னும் அடக்க முடியவில்லையே.

    ReplyDelete

Powered by Blogger.