Header Ads



முஸ்லிம்கள் அகிம்சை வழியில் போராடவேண்டிய கட்டம் வந்துவிட்டது..!


(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

முஸ்லிம் சமுகம் இனியும் பொறுமை காக்க முடியாது. அதற்காக காடையர்கள்போல் யுத்தம் செய்வதைவிட உறுதியான அகிம்சை வழியில் போராடவேண்டிய கட்டம் வந்துவிட்டது.

முதலில் எமது நாட்டிற்கு உதவிக்குமேல் உதவி செய்யும் முஸ்லிம் நாடுகளை எந்தவித தாமதமும் இன்றி நாடவேண்டும் அவர்கள் மூலம் இந்த நாட்டு இனவாதிகளுக்கு பாடம் புகட்டவேண்டுமே தவிர இலங்கையின் அரசையோ அல்லது இலங்கையின் அரசில் ஒட்டிக் கொண்டிருக்கும் உதவாக்கரை அரசியல் வாதிகளையோ நம்பவேண்டியதில்லைஎன மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்தவகையில் அரசியல் கலப்பற்ற ஒரு முஸ்லிம் அமைப்பு ஒன்று மூத்த புத்தி ஜீவிகளை உள்ளடக்கியதாக ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் எமது சமயத்திற்கும், சமயத்தளங்களுக்கும் தொடராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் முடிவுக்கு கொண்டு வர வைக்கவேண்டும் என இன்றிரவு கிறேன்பாஸ் பள்ளித் தாக்குதலைக் கேட்ட முஸ்லிம்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இருள் ஏற்பட்ட பிறகு இவ்வாறு கோழைத்தனமான தாக்குதல்களை செய்யும் காடையர்களை ஊக்கப்படுத்தும் இந்த அரசில் இருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருந்தென்ன இல்லாவிட்டால் என்ன? என மக்கள் கொசமிடுகின்றனர்.

விகாரையில் மணியடித்து வன்முறை செய்யும் ஒரு மதஸ்த்தளத்தை அரசு அனுமதிவழங்கி அங்கு இருக்கும் மதகுருக்கள் செய்யும் அடாவடித்தனத்தை ஏன் அரசு ஏற்றுக் கொள்கின்றது என மக்கள் சந்தேகமும் கவளையும் கொண்டுள்ளது.

இதேவேளை அரசு நிலைமையை கட்டுப்படுத்த கிரேண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமழுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் அதுவரை மக்கள் வீடுகளில் அமைதியாக இருக்குமாறு கூறியதுடன் நாளை விஷேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படிக்  கூட்டத்தில் அரச தரப்பில் மதஸ்தளம் என்ற அடிப்படையில் அதற்கான பாதுகாப்பும். அது செயற்படுவதற்கான உறுதிப்பாடும் வழங்கப்படுமா? என்ற ஐயத்தில் மக்கள் இருக்கின்றனர்.

தற்போது இஸ்லாத்திற்கு சூழ்ச்சி நடைபெறுகின்றது என்பதே உண்மை இதனால் முஸ்லிம்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். ஆனால் முஸ்லிம்களின் துர்அதிஸ்ட்வசம் ஒரு உறுதியான தலைமைத்துவம் இல்லாததே.

6 comments:

  1. ஏனில்லை, Self declared ரிஸ்வி முஃப்திN இருக்கிறாரே!

    ReplyDelete
  2. எமது சகோதரர்கள் அவர்களுக்குள்ளேயே பிரச்சினை பட்டுக்கொள்கிறார்கள் .எமது மொத்த சமூகத்திற்கும் எதிராக இன்று பாரிய திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிரது .நாம் எமக்கு மத்தியில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளமுடியாமல் இன்னும் ஒருவர்மேல் ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறோம் தனது தவரை ஏற்றுக்கொள்ள நான் தயாரில்லை .ஒரு சகோதரனை மற்ற சகோதரர் ஏற்றுகொள்ள முடியமளிருக்கிறது , விட்டுக்கொடுப்புகளை காண முடியாமலிருக்கிறது. சாந்தி மார்க்கம் என்று சொல்கிறோம் அனால் ஒருவர் தவறு செய்துவிட்டால் பெரும் தர்பாரே நடத்திவிடுகின்றோம் .மன்னிக்கும் மா நபியின் உம்மத் நாம் அனால் சகோதரர் ஒருவரை மன்னிக்க கஷ்டப்படுகிறோம். குர் ஆணையும் ஹதீசையும் சொல்லிச் சொல்லியே சமூகப் பிளவுகளை பலமாக்கிக் கொண்டிருகிறோம் .எதிரிகள் மிகயுமே அருகில் இருக்கிறார்கள் .எம்மிடம் எந்தத் திட்டமும் கிடையாது .அடித்தபிறகு ஓடிவருகிறோம் .வார்த்தை வீச்சுக்களை அள்ளி வீசுகிறோம், ரெண்டு வாரம் களித்து எல்லாம் மறந்து விடுகிறோம் .யா அல்லாஹ் எமது சமூகத்தை ஒன்ருபடுத்துவாயாக . எதிரிகள் அதிர்ந்து போகும் சக்தியாக எம்மை ஆக்குவாயாக.

    ReplyDelete
  3. Minister Aswer is there, he is now no more a buddist, because I saw him praying Eid prayer. he will take care of our muslim community, not to worry

    ReplyDelete
  4. இஸ்லாதுகாஹா நம்ம உரிர்ஹலை தியஹம் செய்யும் நாட்கள் வெஹு தூரத்தில் இல்லை வேளினாட்கலிஇல் வாசிக்கும். முஸ்லிம்கல் அணி திரள் வூமஹா

    ReplyDelete
  5. ஆ.. ஊனா... தலைவர்களை குற்றம் சொல்ல வந்து விடுவீர்களே... Abu faweema...

    ReplyDelete

Powered by Blogger.