Header Ads



விகாரையில் மணி அடித்து, பள்ளிவாசலை தாக்கினர் - சில முஸ்லிம்களுக்கு காயம்

கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது சிங்களக் காடைர் கூட்டம் மேற்கொண்ட தாக்குதலில் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் சகோதரர்கள் சிலரும், அருகிலுள்ள முஸ்லிம் வீடுகளிலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் சிலரும் காயமடைந்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார். 

அதேவேளை பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள பௌத்த விகாரையில் மணி ஒலிக்கப்பட்டு, அங்கிருந்து பொல்லுகளுடனும், தடிகளுடனும் வந்தவர்களே பள்ளிவாசலலை தாக்கியதாக ஹுனைஸ் எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார். மேலும் பள்ளிவாசல் உள்ள பகுதியை நோக்கி முஸ்லிம் இளைஞர்கள் ஒரு பகுதியினர் வரைவதாகவும், எனினும் அவர்களை விசேட அதிரப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியதுடன், வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல எனவும், இதுகுறித்து பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், முஸ்லிம்கள் அமைதி காப்பது அவசியமெனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கண்டியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில ஈடுபட்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபரை இளங்ககோனை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். இதன்போது நாளை ஞாயிற்றுக்கிழமை பிரதேசத்தில் சமாதான மாநாடொன்றை கூட்டியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் ரவூப் ஹக்கீமிடம் கூறியதாக ரவூப் ஹக்கீமின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.


9 comments:

  1. மிகவும் வருந்தத்தக்க செய்தி மன்னிக்க முடியாத குற்றம் .என் சகோதரர்களுக்கு ஆறுதல்களை சொல்லி கொள்கிறேன். ஒன்றுபட்டு வாழ்ந்தால் மட்டுமே வென்றுவிட முடியும் .ஒன்றை சுட்டி காட்ட விரும்புகின்றேன் இந்த இணையத்தில் ஒரு விவாதத்தில் ஒரு இஸ்லாமிய நண்பர் பெருன்பான்மை மக்களை ஆட்சியையும் புகழ்த்து பேசியிருந்தார் அதற்க்கு இதை சமர்ப்பிக்கின்றேன்

    ReplyDelete
  2. Where is ACJU and its members??

    ReplyDelete
  3. Now ACJU will say,keep silent,keep peace,but they will not solve these problems

    ReplyDelete
  4. WALAMAI POOL
    walamai pool palli thaakkuthal
    walamai pool polisaar paarthu rasippu
    walamaipool janathifathi ithatkum oru visaranaik komition
    walamaipool 'ellaam thalaivarhall sathiththu waruwaarhall endra namathu asamantham.
    -ithanaik kandu
    walamai pool arasiyal yawarihal 'appadiya? paarthukkonduthaan irukkirom' ennum kaiyalahatha saa NAKKIYA pallavi

    ReplyDelete
  5. அஹிம்சையை போதித்த புத்த பெருமானின் காவி உடைக்குள் ஒழித்துக் கொண்டு இருக்கும் காவி உடை தீவிரவாதிஹளுக்கு எதிராஹா அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க அனைத்து முஸ்லிம்களும் உடன் பள்ளிஹளுக்கு விரையுங்கள்.....அல்லது வீட்டில் இருந்து இரண்டு ரகாதுஹள் தொழுது மன்றாடுங்கள் எமது எதிரிஹளுக்கு ஹிதாயத் குடுக்கும் படி அல்லது அவர்ஹளை அழித்து நாசமாக்கி விடும்படி, நிச்சயம் இறைவனின் உதவி எம்மை வந்து சேரும் இன்ஷாஅல்லாஹ்......

    ReplyDelete
  6. இந்த சம்பவம் இருவருக்கு சந்தோஷத்தை கொடுக்கும்
    1. றிஸ்வி முப்தி பள்ளி பிரச்சினை வந்ததால் பிறை குழப்பத்தை மக்கள் மறந்து விடுவார்கள்
    2. ரவூப் ஹகீம் மீண்டும் பள்ளியை உடைக்கிறார்கள் என்று மக்களை ஏமாற்ற மக்களும் முட்டாள்தனமாக அவரது கட்சிக்கு வாக்களிப்பார்கள் தேர்தலில் வென்றதும் அரசாங்கத்தின் காலில் விழுந்து கும்பிடுவதற்கு இந்த வாக்குகளை கானிக்கையாக வைப்பார் இது நிச்சயம்.
    எல்லா பேர்தாங்கி முஸ்லிம் அமைச்சர்களும் ஊழல் மோசடி பேர்வழிகள் அதனால் இவர்கள் எத்தருனத்திலும் அரசை விட்டு விலக மாட்டார்கள் அப்படி விலகினால் தங்களுடைய பைலை அரசாங்கம் வெளியாக்கி உள்ளே தள்ளி விடுவார்கள் என்ற பயம்
    அதனால் இந்த நாட்டு முஸ்லிம்களே சிந்தித்து வாக்களியுங்கள்
    வடமாகாண முஸ்லிம்கள் ஊழல் மோசடி இல்லாமல் அற்ப சலுகைகளுக்கு தனது சமூகத்தை காட்டிக்கொடுக்காமல் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழர் விடுதலை கூட்டனிக்கு வாக்களித்து உங்கள் மத உரிமையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்
    மற்ற மாகாணங்களில் வாழ்வோர் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கவும்
    ஹகீமுக்கோ என் ஊரவரான றிஷாதுக்கோ தயவு செய்து வாக்களிக்காதீர்கள் ஏனென்றால் அவர்கள் உங்கள் வாக்குகளை பள்ளிகளை உடைக்கும் அரசாங்கத்துக்கு விற்று விடுவார்கள்
    திருடர்கள் ஜாக்கிரதை

    ReplyDelete
  7. Rauf!!!! for you attention stop licking Shoes of Mahinda & Co. You must take this matter to Parliment to make open debate of what is going on. No use calling IGP and save your skin and double face this you have been doing since you support this Government.

    ReplyDelete
  8. தாக்குதலைக் கண்டிக்காது பார்த்துக்கொண்டிருந்த பொலிசார்
    உடனடியாக கட்டுப்படுத்த முடியாத இலங்கையின் அரண்
    பள்ளியைப் பாதுகாக்க வந்தவர்களைத் தடுத்த பொலிசார்
    காடையர்களுக்கு நோவினைவராது பாதுகாத்த காவலர்கள்.
    அறிக்கை விடும் தலைவர்கள், பார்வையிடும் அமைச்சர்கள்.
    விசாரணைக் கமிசன்களை நியமிக்கப்போகும் ஜ .... தி
    கடைசியில் பூச்சியமாகும் நிகழ்வுகள்.
    நடக்கப்போவது இவைதான்.
    அனைவரும் பிரார்த்திப்போம்
    அநியாயக்காரர்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை
    இதற்கு நம்நாடே உதாரணம்
    பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.

    ReplyDelete
  9. சகோதர சகோதரிகளே ! அல்லாஹா குறுகிரான் "முஸ்லிம்கள் முஸ்லிம்கள் அல்லதா வரைக்கும்.நாங்கள் உங்களை மர்றவர்களிடமிருந்து உங்களை நகங்கள் சோதிப்போம்".ஆதலால் நாங்கள் முதலில் முஸ்லிம்களாக நடப்பதற்கு முயற்சி செய்வோம். தகவல் ஓகே, சில பிழைகள் உண்டு. தகவல் சொல்லுபவர் அந்த இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும், இரண்டாவது ஆறு மணிக்கு எல்லாம் விகரயில் மணி ஒலிக்கும் ஆதலால் அது ஏற்கதக்கது. இது ஏன் சொல்வேதேன்றல். நம்முடைய தகவல் கூட மற்றவர்களுக்கு படிப்பினையாகவும், முஸ்லிம்களை நம்பக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இந்த தகவளை பார்த்து மற்றவர்கள் இஸ்லாத்துக்கு வருவதற்க்கு வாய்ப்புண்டு. "அல்லா நாடினால்", எனவே இனிவரும் காலங்களில் உண்மை தகவல்களையும், அநாகரிக வார்த்தைகலை விட்டும் அறிவிப்போம். சிறிய வார்த்தைகளால் பெரிய விளைவுகளையும் சந்திக்க நேரிடும். உதாரனுதுக்கு "ஈரோசிமா நாகசாகி" இதன் வரலாறை புரட்டிபர்கவும். அல்லாஹா எனக்கும் உங்களுக்கும் நல் அருள்பளிபனாக. ஆமீன்

    ReplyDelete

Powered by Blogger.