அரசின் தயக்கம் முஸ்லிம்களை ஆத்திரமடைய வைத்திருக்கின்றது - ரவூப் ஹக்கீம்
(ஏ.எல்.ஜுனைதீன்)
என்னுடைய பார்வையில் இந்நாட்டின் அரசியல் ஒரு நெருக்கடியான கட்டத்திற்கு வந்திருக்கிறது என்பதைத்தான் நான் பார்க்கின்றேன். எனவேதான் வன்முறை அரசியலில் இருந்து விடுபட்டு சாத்வீக அரசியலின் சாத்தியப்பாடுகளை மிக ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு கட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நினைவுறுத்துவதற்காகத்தான் என்னுடைய இந்த தந்தை செல்வாவின் ஞாபகர்த்த உரையின் சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும் என்னும் தலைப்பாகும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் 2013.08.02 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலையகமான தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவுப் பேருரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு வைத்து அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
தந்தை செல்வாவை தெற்கில் இருப்பவர்கள் பிரிவினைவாதியாகத்தான் பார்த்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஏன் இந்த புத்தகத்தை வெளியிடுகிறீர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் எனது செயலாளர் நாயகத்திடம் வினவியுள்ளார். ஏன் எதற்காக இச்சந்தர்ப்பத்தில் பேச வேண்டும் இது அதற்கு உகந்த காலம் அல்ல. இதனை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவரையும் இக்கூட்டத்திற்கு வருமாறு அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன் அவர் இங்கு வரவில்லை. இன்றிருக்கும் கட்டத்தையும் விட இதனைப் பேசக்கூடிய கட்டம் வேறு இருக்க முடியாது. தந்தை செல்வாவின் சாத்வீகப் போராட்டம் ஒரு சாமான்யமான போராட்டம். இதற்கு அரசியலுக்கு அவர் கொடுத்த விலை சாமான்யமானது. தெற்கிலே 1967-1970 காலத்தில் .சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு துணிந்த ஒரு நிலைதான் வடக்கிலும் ஒரு ஆயுதப் போராடாத்திற்கு வித்தை ஒரு வழியை ஏற்படுத்திய நிலைமை புதிய அரசியலமைப்பின் மூலம் உருவானது. என்று சொன்னால் அது மிகையாகாது.
அதேமாதிரி அடுத்த அமைப்பில் அரசாங்கம் 5/6ல் பெரும்பான்மையோடு மிகக்கொடுரமாக அந்த தெற்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் ஏறத்தாள 10 ஆயிரம் இளைஞர்களைப் பலி கொண்டு அடக்கப்பட்ட நிலையிலும் அடுத்த அரசாங்கம் மீண்டும் அந்த தெற்கு இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் மீள எழுர்ச்சி பெறக்கூடிய நிலை ஏற்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. வன்முறை அரசியல் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் சொந்தமாக இருக்கவில்லை என்பதைத்தான் நாம் பார்க்கின்றோம். மீண்டும் சக்கரம் சுழன்று அதே இடத்தில் வந்து.நிற்கின்றது. ஒரு வன்முறை அரசியல் ஒடுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மீண்டும் அது தலை தூக்காது என்பதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என்று யாரும் முடிவுக்கு வந்து விடமுடியாது.
எனவேதான் மீண்டும் மீண்டும் இந்த வன்முறை அரசியலை முழுமையாக வெறுத்து ஒதுக்கி சாத்வீகமான தனது அரசியலைச் செய்த ஒரு நேர்மையான அரசியல்வாதி தந்தை செல்வா பற்றி இந்தக் கட்டத்தில் பேசாமல் வேறு எந்தக் கட்டத்தில் பேசுவது. ஆனால் எம்மவர்கள் பிரிந்த மனப்பான்மையோடுதான் அரசியல் செய்கின்றார்கள். உண்மையைப் பேசுவதற்கு தயங்குகிறார்கள். இந்தக் கட்டத்தில் மிகத் தெளிவாக நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மையான சில அம்சங்கள் இருக்கின்றன.
பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்த தேசிய இனப் போராட்டம் ஒன்றில் அவை ஒவ்வொன்றினதும் தனித்துவங்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பதில் தமிழ் இயக்கங்களிடமிருந்து அரசியல் போதாமையின் வேளிப்பாடுதான் இந்த வன்முறை செயற்பாடுகள் என்பதை நாங்கள் மனம் கொள்ள வேண்டும்.
தந்தை செல்வா மிகுந்த கரிசனையோடு கட்டியமைத்த முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லும் சுய நிர்ணயக் கோட்பாடு கைவிடப்பட்டு பாஸிஸ அடக்குமுறையிலான தமிழ் ஈழப் போராட்டமாக அது முஸ்லிம்களை அச்சுறுத்திய போது முஸ்லிம்கள் அவர்களிடமிருந்து தூர விலகிச் செல்ல முயன்ற போது அவர்களின் முயற்சியின் போக்கை அரசியல் ரீதியாக அனுகமுடியாத அல்லது அனுகத் தெரியாத விடுதலைப் புலிகள் தமது இராணுவக் கண்ணோட்டத்தில் தீர்வு காணப்பட்டதின் விபரிதம் தமிழ் முஸ்லிம் பிரிவினைவாதத்தை உருவாக்கியது என்பதை நாம் உணரல் வேண்டும். அந்தப் பின்னணியில்தான் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இருக்கின்ற புதிய அச்ச உணர்வு. இந்த அச்ச உணர்வை அரசுக்கு எதிரான வெறுப்பு உணர்வாக மாற்றுவதற்கு இடம் கொடுக்காமல் அதை எதிர் கொள்வதற்கான சாத்தியமான வழி முறைகளைப் பற்றி மிகத் தீவரமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது மஹியங்கனையில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் எனக் கேள்விப்படுகின்றோம்.
வெறும் 50 முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்கின்ற கடைத்தெருவில் அவர்களுக்கு தொழுகைக்காக இருக்கின்ற ஒரு பள்ளிவாசலை இல்லாமலாக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம் ரமழான் மாதத்தில் பள்ளிவாசலுக்குள் பன்றி இறைச்சி இரத்தங்களை வீசுகின்ற மிகக்கேவலமான ஒரு செயல்பாடு ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் அதக் கண்டிப்பதற்கு அரசின் மேலிடம் தயங்குகின்றது என்றால் அதைப்பற்றிய பொறுப்புணர்வு குறைந்த பட்சம் இச் செயல்பாடுகளை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என்ற அறிக்கையாவது விடவில்லையே என்கின்ற ஆதங்கம்தான் இன்று முஸ்லிம் மக்களை ஆத்திரம் அடைய வைத்திருக்கின்றது. இந்த தீவிரவாத செயல்பாடுகளை கட்டுப்படுத்த தம்மால் முடியவில்லை என்றாலும் கண்டிக்கவாவது முடியவில்லையா? என்றுதான் கேட்கின்றோம். இந்த நிலையில்தான் நாங்கள் மீண்டும் தந்தை செல்வாவின் புத்தளம் பள்ளிவாசல் தொடர்பாக கண்டித்து பேசியதை முஸ்லிம் சமூகம் இன்றும் நினைவு கூறுகின்றது.

Engaluuku ungamelathan athiram ippo unngala onnum elathu pechil kurai illai anl ther is no actio becaus u want ony power however u have to answer for all Mighty Allah u can speak any thing but Allah knows every thing
ReplyDeleteசெல்லி வேலயில்ல.. சரியான டைம்ல சரியாத்தான் தலைவர் சாக்குகள அவுக்காரு!
ReplyDeleteஎன்டாலும் தலைவர் போய் சேர்ரதுக்கு முன்னால பிஎம்ஜிஜிட தலைமையில கொஞ்சம் படிச்ச ஆக்கள் அந்த சைட்ட பாத்துட்டாங்க..
தலைவருக்கு ஈஸ்ட்ல குடுத்த சான்ஸ அவரு சரியா புடிச்சிரிந்தா இந்நேரம் தலைவர் எங்கேயோ போயிருப்பாரு... இனி என்ன செய்யேலும் மக்க? இப்படித்தான் பேசிப் பேசி ஈக்க வேண்டியதுதான்!
எப்பவோ ஒரு பொஸ்தகத்தில படிச்ச வரிகள் ஞாபகம் வருது...
'தலைவர்கள் எப்போதும் உ;ண்மைக்காக வாதாட தயாராக இருக்க வேண்டும். காரணம், உண்மை என்பது எப்போதும் மக்கள் நலன்களுக்கு சாதகமானது.'
'தலைவர்கள் எப்போதும் தமது தவறுகளைத் திருத்த தயாராக இருக்க வேண்டும். காரணம், தவறுகள் எப்போதும் மகக்ள் நலன்களுக்கு பாதகமானவை.'
சரீயா செல்லீயீக்காங்க இல்லீயா...?
-புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
நீங்கள் இருப்பதெல்லாம் முஸ்லிம் வாக்களர்களை உசுப்பேற்றி கொள்ளையடித்து அரசுக்கு விற்று அமைச்சரவை சுகபோகதிற்கும் மற்றும் சொகுசுகளுக்கும் தான் ...ஆனால் நீங்கள் பிரதிநித்துவம் செய்யும் சமூகத்திக்கு ....உங்களுக்காக பேசவேண்டியவர்கள் எதிர் தரப்பு அரசியல்வாதிகளும் அரசில் அங்கம் வகிக்கும் பெருன்பான்மையின அமைச்சர்களான வாசு,டிலான் போன்றவர்கள் என்றால் தவறில்லையே? உங்களுக்கு அமைச்சர் பதவி சொகுசு அனுபவிக்க காரணமான மர்ஹூம் தலைவரும் வன்முறை அரசியல் அணுகுமுறையை மேற்கொண்டதனால் தான் ...தாங்கள் தந்தை செல்வாவை சாத்வீக அரசியலின் குருவாக மானசிகமாக ஏற்றுள்ளீர்களோ ....???? என்னே உங்கள் வக்கற்ற அரசியல் தலைமைத்துவம் ...சரணாகதி அரசியல் மட்டுமல்ல சமூகதிக்கும் அதே அடிமை வாழ்வை பிரதிஷ்டை செய்ய மு.கா,வில் இருந்து பிரிந்து அமைச்சரானவர்களும் அதற்கு உரமூட்டுகின்றன்ர்.....
ReplyDeleteசார், நீங்கள் என்ன பேசுகிறீர்கள்...??? உங்களுக்கு முஸ்லிம் சமுகத்தின் உரிமையை விட இந்த மந்திரி பதவியும் ராஜபக்ச அன் கோ வும் தான் பெரிதாக தெரிகிறது.
ReplyDeleteதந்தை செல்வாவை பற்றி நீங்கள் பேசுவதற்கு முதல், உங்கள் அரசியல் பயணத்தையும் தந்தை செல்வாவின் அரசியல் பயணத்தையும் அவரது கருத்துக்களையும் சற்று சீர் தூக்கிப் பாருங்கள் அப்போது தெரியும் நீங்கள் யார் என்பது.
தந்தை செல்வா ஒருகட்டத்தில் கூறினார் இந்த தமிழர்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று, அதேபோல் உங்கள் தலைமைத்துவத்தில் இந்த முஸ்லிம் சமுகத்தை அந்த அல்லாஹு தான் காப்பற்ற வேண்டும்.
இந்த நாட்டின் சட்டம், ஒழுங்கு, அரசியல் சாசனத்தில் உள்ள ஒரு சமுகத்தின் மத கலை கலாச்சாரம் மதிக்கப்படுதல் தனி மனித சுதந்திரம்.... போன்றவற்றை இந்த அரசாங்கம் ( நீங்களும் அதில் உள்ளடக்கப்படுகிரீர்கள் அதிலும் நீங்கள் நீதி அமைச்சர் ) பாதுகாக்க தவறி விட்டது. எனவே இந்த அரசாங்கம் பதவியில் இருந்து அகற்றப் பட வேண்டும்.
இவ்வைபவத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது:-
ReplyDeleteநேற்று வியாழக்கிழமை வெலிவேரியப் பகுதியில் ஒரு சம்பவம் இடம்பெற்றது.இந்த நாட்டிலே சட்டமும் ஒழுங்கும் சம்மந்தமான விடயம் இது. இங்கு வந்திருந்த வெளிநாட்டு தூதுவர் ஒருவர் என்னிடம் கேட்டார். ஏன் எதற்கு எல்லாவற்றிற்கும் முன்னால் இராணுவம் அந்த இடத்திற்கு போகின்றது? ஏன் பொலிஸார் போவதில்லை எனக் கேட்டார். கலகம் அடக்குவது என்பது முதலிலே பொலிஸாருக்கு உரிய முக்கியமான தொழில்.
இந்த தடியடிப் பிரயோகம் குண்டர்களின் தாக்குதல் என்பவற்றையெல்லாம் எதிர்கொள்வதில் தந்தை செல்வா எதிர்நோக்கிய ஒரு அனுபவம் எங்களுக்கும் இருக்கிறது. காலிமுகத்திடலில் இருந்து எத்தணையோ சத்தியாக்கிரகப் போராட்டங்கள். அவருடைய போராட்டத்தில் முஸ்லிம்களும் பங்கு கொண்டார்கள் என்ற விடயம் அடையாள ரீதியாக நடந்த ஒரு விடயமல்ல. உணர்வு ரீதியாக நடந்த ஒரு விடயமாகும்.
நான் இங்கு தேர்தல் காலத்தில் தேர்தல் பற்றி பேச வரவில்லை.ஆனால் ஒரு புதிய நெருக்கடியை எதிர்நோக்குகின்றேன். என்னவென்றால் அரசாங்கமும் எங்களை சரியாக எடைபோட முடியாமல் தடுமாடுகின்றது. எதிர்கட்சியும் மறுபுறத்திலே எங்களைப் பற்றி தவறாகத்தான் பர்க்கின்றது. நாங்கள் நாட்டிலே நடக்கின்ற இந்த மூன்று மாகாணங்களுக்குமான தேர்தலில் மூன்று மாகாணங்களிலும் தனித்துப் போட்டியிடுவது என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கின்றோம். இதில் விசித்திரம் என்னவென்றால் வடக்கில் தனித்து போட்டியிடுகின்ற போது அரசாங்கத்திலுள்ள ஒரு சிலர் நினைக்கிறார்கள் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தி அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தப் பார்க்கின்றோம் என நினைக்கின்றார்கள்.
தெற்கிலே தனித்து கேட்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சி சொல்கின்றது நாங்கள் தனித்துக் கேட்பதால் தங்களைப் பலவீனப்படுத்தி நாங்கள் அரசாங்கத்தைப் பலப்படுத்துகின்றோம் என்று கூறித் திட்டுகிறார்கள். இதை என்னுடைய பார்வையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்தது வெறும் தற்காப்பு நடவடிக்கைதான். எங்களை எங்களுடைய கட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேறு வழியில்லாமல் தனித்துக் கேட்கின்றோம். எமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு இதைத் தவிர வேறு வழி நாங்கள் காணவில்லை. எனவேதான் தனித்துக் கேட்கின்றோம். யாரையும் பலவீனப்படுத்தவோ யாரையும் பலப்படுத்தவோ நாங்கள் இதைச் செய்யவில்லை. எனவேதான் வடக்கிலும் தெற்கிலும் ஒரே மாதிரி கேட்கின்றோம். ஆனால் இதைப் புரிந்து கொள்வதற்கு நாட்டின் ஆளும் கட்சிக்கும் முடியவில்லை. எதிர்கட்சிக்கும் முடியவில்லை. மாறி மாறி எங்களைத் திட்டித்தீர்க்கிறார்கள். தந்தை செல்வாவின் இறுதி யாத்திரை நிகழ்ந்த போது தெல்லிப்பளை சந்தியில் ஒரு பதாதை இருந்தது அந்த பதாதையில் இருந்த வாசகங்கள் இன்றும் உண்மையாக ஒலிக்கின்றது. அதில் இப்படியிருந்தது. "உத்தமனார் ஊர்வலத்தில் உயிரோடு போகின்றார். செத்தவராய் நாமெல்லாம் வீதியிலே நிற்கின்றோம்." நன்றி.
இவ்வாறு அவர் கூறினார். _ஏ.எல்.ஜுனைதீன்
Your speeches and statements are just time passing tactic. No serious action taken by you to solve the problems.
ReplyDeleteDon’t forget that you are also part of the government, which is responsible for these problems.
Starting எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உங்களுடைய Finishing சரியில்லயே சார்
ReplyDelete