புதன்கிழமை (பெருநாள்) தலைப்பிறை பார்க்கும்படி வேண்டுகோள்
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மகாநாடு எதிர்வரும் 07 ஆம் திகதி புதன் மாலை மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
07.08.2013 புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமாகிய 06.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை பார்க்குமாறும் தலைப்பிறை கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் உடனடியாக நேரிலோ அல்லது 0115234044, 2432110, 01122390783, 0777366099 ஆகிய தொலைபேசிக ளுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

Post a Comment