Header Ads



ஆவுஸ்திரேலியாவின் சூப்பர் கம்ப்யூட்டருக்கு ஐப்பானிய கடவுளின் பெயர்


ஆஸ்திரேலியா, சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. இதற்கு ஜப்பானிய கடவுளின் பெயரை வைத்துள்ளது. ஒரு வீட்டை விட பெரிதாக உள்ள இந்த மெகா கம்ப்யூட்டர், வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது. இதன் பெயர் ரெய்ஜின்; ஜப்பானிய மொழியில் மழை மற்றும் மின்னல் என்று பெயர். அந்த நாட்டு மழை கடவுளின் பெயர். அவர்கள் ஒத்துழைப்பு இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இருபதாண்டு உழைக்கும் திறன் படைத்த இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 700 கோடி மக்கள் கால்குலேட்டரை பயன்படுத்தி சேகரிக்கும் விவரத்தை ஒரு மணி நேரத்தில் கணக்கிட்டு விடும். 40 ஆயிரம் கம்ப்யூட்டர்களின் மெமரி சக்தியை கொண்டது. 

கான்பெர்ரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் தனி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து வைத்த விஞ்ஞானிகள் கூறுகையில், ‘வானிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு இனி மற்ற நாடுகளுக்கு ஆஸி நிபுணர்கள் போக வேண்டாம். இங்கு எல்லா வசதிகளும் இதில் உள்ளது’ என்றனர். 
உலகின் 27வது சூப்பர் கம்ப்யூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் 15 நாடுகளில் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதில் ''டாப் டென்'' நாடுகள்

1. அமெரிக்கா , 10 டார்பா டிரைல் சப்செட், வேகம்: 1.52 பெட்டாபிளாப்ஸ்
  (பெட்டாபிளாப்ஸ் என்றால், ஒரு வினாடியில் 10,000000000000000 முறை இயங்கும் திறன் உடையது.)
2. இத்தாலி , 9 பெர்மி, வேகம்: 1.73 பெட்டாபிளாப்ஸ்
3. சீனா , 8 டியான்கி,1ஏ, வேகம்: 2.56 பெட்டாபிளாப்ஸ்.
4. அமெரிக்கா (டெக்சாஸ் பல்கலை. ஆஸ்டின்) , 7 ஸ்டாம்பேட், வேகம்: 2.6 பெட்டாபிளாப்ஸ்.
5. ஜெர்மனி , 6 சூப்பர்எம்யூசி, வேகம்: 2.89 பெட்டாபிளாப்ஸ்.
6. ஜெர்மனி (ஜூலிச் ஆய்வு மையம்) , 5 ஜுகுயின், வேகம்: 1.38 பெட்டாபிளாப்ஸ்.
7. அமெரிக்கா (டிபார்ட்மென்ட் ஆப் எனர்ஜிஸ் ஆர்கோனி நோஷனல் லெபாரட்டரி) , 4 மிர்ரா, வேகம்: 8.16 பெட்டாபிளாப்ஸ்.
8. ஜப்பான் , 3 கே கம்ப்யூட்டர், வேகம்: 10.51 பெட்டாபிளாப்ஸ்.
9. அமெரிக்கா (எரிசக்தி துறை) , 2 சீகுயோ, வேகம்: 16.32 பெட்டாபிளாப்ஸ்.
10. அமெரிக்கா (எரிசக்தி துறை) , 1 டைடன், வேகம்: 17.59 பெட்டாபிளாப்ஸ்.

No comments

Powered by Blogger.