எகிப்து இராணுவ ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்
மொஹமட் முர்சியை பார்க்க அனுமதிக்கப்பட்ட முதல் நபரே வெளிநாட்டினர் என்பதையிட்டு வெட்கப்பட வேண்டும் என முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அரசியல் பிரிவின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான அம்ர் டர்ரக் குறிப்பிட்டார். அவர்கள் தமது சொந்த மக்களை விடவும் தமது சர்வதேச பார்வையை வலுப்படுத்துவதில் மாத்திரம் தான் கவலையடைகிறார்கள் என்றார்.
இந்நிலையில் எகிப்து சென்றிருக்கும் ஆபிரிக்க ஒன்றிய தூதுக் குழுவும் நேற்று முர்சியை சந்தித்து ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் முர்சி தடுத்து வைக்கப்பட்ட காலப் பிரிவுக்குள் கடுமையான இராணுவ பாதுகாப்புக ளுடன் மூன்று தடவைகள் இடம்மாற்றப்பட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் ஏ. பி. செய்திச் சேவைக்கு கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment