பதிவு செய்யப்படாத இணையங்களின் தடைக்கு பொறுப்புக்கூறமுடியாது - அமைச்சர் கெஹெலிய
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
தகவல் ஊடகத்துறை அமைச்சில் பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க முடியாதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) தகவல் ஊடகத்துறை அமைசில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலலிளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-
இலங்கையில் இயங்கும் இணையத்தளங்களை எமது அமைச்சின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவை முடிவின்பட நாம் செய்துள்ளோம்.
அதற்கான முந்திய கட்டணங்களும் குறைக்கப்பட்டு விசேட சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதிகளை இணையத்தளங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அமைச்சில் பதிவு செய்துகொள்ளாத எத்தனையோ இணையத்தளங்கள் இலங்கையில் இயங்குகின்றன. அவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தினால் பொறுப்புக் கூறமுடியாதென்றும் அமைச்சர் கூறினார்.
.jpg)
சட்டத்தை மதித்து நடக்கக்கூடிய முன்மாதிரிகளாக நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சட்டமொன்று உள்ள நிலையில் அதை மதியாது நாம் முன்னெடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் சட்டரீதியாக நம்மால் எதிர் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையையே காண்கின்றோம். ஊடகங்களுக்கும் அது விதிவிலக்கல்ல. மேற்கூறப்பட்ட அரசின் கருத்து முற்றிலும் நியாயமானதே......
ReplyDeleteநீங்கள் நல்ல முறையில் நடந்தால் இதுபோன்ற சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் தொடை நடுங்கவேண்டிய அவசியமில்லையே.
ReplyDeleteமாணிக்ககல்யாவாரி கீரக்கடக்காரனிடம் சண்டைபோடுறமாதிரி இருக்கு கணக்கு.