Header Ads



இலங்கையில் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் தந்திச் சேவை நிறுத்தப்படும்

(எம்.எம்.ஏ.ஸமட்)

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியுடன் இலங்கையில் தந்திச் சேவை நிறுத்தப்படுமென தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரன்ஜித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிடுகிறார்.

நவீன தொடர்பு சாதனங்களினூடான தகவல் பரிமாற்றங்கள் இலங்கையில் வளர்ச்சி கண்டுள்ளதனால் தபால் சேவையின் மூலம் இடம்பெறும் தந்திச் சேவையினை நாடுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு ஏறக்குறைய 250 பேரளவிலேயே தந்திச் சேவைளயினை நாடுகின்றனர். இவற்றைக் கருத்திற்கொண்டு இச்சேiவையினை இடைநிறுத்த வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, இலங்கையைப் பொறுவரை தந்திச் சேவையானது அதிக செலவுமிக்கதென தபால் திணைக்களத்தின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவிக்கிறார்.

நாட்டில் தற்போது தகவல் பரிமாற்றத்துக்காகப் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் மற்றும் குறுங் தகவல் பரிமாற்ற சேவைகளுடன் தந்திச் சேவைளை ஒப்பிடுகையில் தந்திச் சேவை செலவுமிக்கதாகவுள்ளது.

10 சொற்கள் கொண்ட ஒரு தந்தியினை அனுப்பவதற்கு அனுப்புபவரிடமிருந்து திணைக்களம் 3 ரூபாவை மாத்திரம் கட்டணமாக பெறுகிறது. ஆனால் அத்தந்தியினை பெறுநருக்கு அனுப்புவதற்கு திணைக்களம் 250 ரூபாவைச் செலவிடுகிறது.

தற்போது தந்திச் சேவையினை பாராளுமன்றமும்  சில வர்த்தக நிறுவனங்களுமே  மிகவும் பின் தங்கிய பிரதேச மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக பயன்படுத்துகின்றன. ஆனால் காலணித்துவக் காலங்களில் இதன் சேவை மிகவும் வேண்டப்பட்டதொன்றாக இருந்தாக அவர் குறிப்பிடுகிறார்.

தகவல் பரிமாற்றங்களின் வேகத்துக்கேற்ற தபால் சேவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவது அவசியம் . அந்ந வகையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தபாலினூடாக பணப்பரிமாற்றம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் தொடரில் தந்திச் சேவையும் நிறுத்தபடவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். 

இந்நிலையில், அண்டைய நாடான இந்தியாவில் கடந்த ஜுலை மாதம் 14ஆம் திகதியுடன் 163 வருட பழைமைவாய்ந்த தந்தித் சேவை நிறுத்தப்பட்டது. உலகின் பல வளர்ந்த மற்றும் வளர்முக நாடுகள் தந்திச் சேவையினை நிறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது என்பதுடன் இலங்கையில் தபால் சேவையானது 1798ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.