எகிப்தில் இராணுவ பயங்கரவாதம் - ராணுவ கூட்டுப் பயிற்சியை ரத்து செய்ய ஒபாமா உத்தரவு
மாசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கா-எகிப்து ராணுவ கூட்டுப் பயிற்சியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு எகிப்துக்கு ஆண்டு தோறும் 1.3 பில்லியன் டாலர்களை ராணுவ உதவியாகவும், 250 மில்லியன் டாலர்களை இதர வகையிலான நிதி உதவியாகவும் வழங்கி வருகிறது. முஹம்மது மோர்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்து ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் அப்பாவி பொதுமக்களை கண்மூடித்தனமாக போலீசார் சுட்டுக் கொன்று குவித்து வருவது அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்துக்கு தனது கண்டனத்தை சரியான வகையில் பதிவு செய்யும் விதமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்கா-எகிப்து கூட்டு ராணுவ பயிற்சியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எகிப்துடன் ஆன உறவுகளை நாங்கள் தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம். எனினும், உரிமைகளுக்காக போராடும் மக்களை வீதிகளில் சுட்டுக்கொன்று குவித்துவரும் நிலையில் எப்போதும் போல் உறவுகளை தொடர முடியாது.
மோர்சியின் ஆதரவாளர்கள் பழிக்கு நாங்கள் ஆளாகி வரும் அதே வேளையில் மற்றொரு தரப்பினரும் நாங்கள் மோர்சியை ஆதரிப்பதாக கருதுகின்றன.
எகிப்தில் அமைதியான, வளமான, ஜனநாயக சூழ்நிலை நிலவுவதையே நாங்கள் விரும்புகிறோம். எகிப்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையால் அந்நாட்டுடனான உறவுகள் தொடர்பாக மறுசிந்தனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எகிப்தின் இடைக்கால அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பதை சீராய்ந்து அந்நாட்டுடன் அமெரிக்காவின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்று எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அறிக்கை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.
மோர்சியின் ஆதரவாளர்களை கொன்றுக்குவிக்கும் எகிப்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கெய்ரோவில் உள்ள தூதரை துருக்கி அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. இதனையடுத்து, எகிப்து கடற்படையுடன் கூட்டு கடற்படை பயிற்சிக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாட்டையும் துருக்கி நேற்று ரத்து செய்தது.
இது தொடர்பாக, துருக்கி வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் 'டுவிட்டரில்' தெரிவித்துள்ள தகவலின்படி, எகிப்து-துருக்கி கூட்டு கடற்படை பயிற்சிக்கான 2 திட்டங்கள் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
naam en boilas kolikku irakkamaaka theeni podram.40naalil aruththu thinna.Ekipthu pattri eriya kaaraname Israel,America,mannaraatchi Arabu naadukal.
ReplyDeleteIppoluthu theemoottiya America boiles Mursikkaaka pachchaathaapam.
ikwaankal purinthu kondaal sari.