ஆப்கானிஸ்தானில் அனுமதி பெறாமல் கடைக்குசென்ற மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்
அனுமதி பெறாமல் கடைக்கு சென்ற மனைவியை சுட்டுக் கொன்ற ஆப்கானிஸ்தான் ஆசாமியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள சஹர் தாரா மாவட்டத்தை சேர்ந்த கொடைடாட். இவருக்கு 24 வயதில் இளம் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று மனைவியை கடை வீதியில் தனியாக பார்த்ததாக நண்பர்கள் கூறியதையடுத்து, ஆவேசமடைந்த கொடைடாட், அவசர அவசரமாக வீட்டிற்கு சென்ரு வீட்டில் மனைவி இல்லாமல் போகவே ஆவேசம் இருமடங்கானது.
சற்று நேரம் கழித்து வீட்டினுள் நுழைந்த மனைவியிடம் 'எங்கே சென்றிருந்தாய்?' என்று கேட்க, கடைக்கு சென்றதாக மனைவி பதிலளித்தாள்.
'என்னிடம் அனுமதி பெறாமல் எப்படி நீ தனியாக கடைக்கு போகலாம்?' என்று கேட்ட கொடைடாட், கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் மனைவியை துடிதுடிக்க சுட்டுக் கொன்றார்
தப்பியோடி தலைமறைவாக இருக்கும் அவனர பிடிக்க சஹர் தாரா மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
.jpg)
Post a Comment