Header Ads



இலங்கையில் உயர் தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த இஸ்ரேல் இணக்கம்

இலங்கை வருகை தற்போதுள்ள இஸ்ரேல் பிரதி நிதிகளுக்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்குமிடையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கையில் விவசாய மற்றும் நீர்ப்பாசன செயற்திட்டங்களுக்கு உயர் தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

நீர் முகாமைத்துவத்திற்காக உலகில் உயர் தொழில்நுட்ப முறையை பின்பற்றும் நாடாக இஸ்ரேல்நாடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தச்சந்திப்பில் இஸ்ரேலின் விவசாய தொழில்நுட்ப முறை தொடர்பில் இலங்கை பொறியியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க இஸ்ரேல் குழு இணக்கம் தெரிவித்துள்ளதுடன் விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறையிலும் புதிய பண்ணை முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியுமென இஸ்ரேல் தூதுக் குழு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை பொறியியலாளர்கள் மூலம் கடந்த காலங்களில் நீர்ப்பாசனத் துறையில் பன்மடங்கு முன்னேற்றத்தை அடைந்துள்ளபோதும் விவசாயிகள் தமது நடவடிக்கைகளுக்காக கூடுதலான நீரைப் பயன்படுத்துகின்றனர் எனவே உலகம் எதிர்நோக்கியுள்ள வறட்சியான காலநிலையில் இவ்வாறான செயற்பாடு பொருத்தமற்றதாக காணப்படுகிறது எனவே இஸ்ரேலின் நீர் முகாமைத்துவ முறையை இலங்கையிலும் பின்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இஸ்ரேலை உள்ளே எடுத்தால் உன் தூக்கம் கெட்டுவிடும்.

    ReplyDelete

Powered by Blogger.