Header Ads



நவநீதம் பிள்ளையை திருமணம் முடித்தல் - மேர்வின் சில்வாவின் தனிப்பட்ட விவகாரம்

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விடயம் சூடுபிடித்தது.

தான் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளரை மணந்து கொள்ள விரும்புவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம்  சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

இக்கருத்து  தெடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்கம் கேட்டனர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய- இது அவரது தனிப்பட்ட விடயம். அது பற்றி என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

உங்களது கண்டிப் பிரதேசத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என மற்றும் ஒரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்துக்கொண்டே பதிலலித்த அமைச்சர் அது பொலிஸ் தினைக்களத்தினால் நடாத்தப்பட் ஒரு நிகழ்வு. இது ஒரு சர்வதேச வேலைத்திட்டமாகும் என்று கூறினார்.

1 comment:

  1. இந்த மடையன் சில்வாவுக்கு நவநீதம் பிள்ளையை திருமணம் முடிக்க ஆசையாம். கண்டியில் நாய்களுக்குத் திருமணம் செய்விக்கின்றார்கள். அந்த நாய்களில் ஒன்றை இவனுக்கு திருமணம் முடித்து வையுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.