Header Ads



நோன்புப் பெருநாள் தலைப்பிறையும், ரவூப் ஹக்கீமும்..!

(Dr Hafeez)

'ஈதுல் பித்ர்' நோன்புப் பெருநாள் தினத்தை தீர்மானிக்கும் விடயத்தில் கொழும்பு பெரியபள்ளிவாசலில் நேற்று (07) இரவு கூடி ஆராய்ந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய, கலாசார திணைக்களம் மற்றும் பெரியபள்ளிவாசல் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட முடிவு பற்றி எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் தாம் நல்லிரவில் உலமா சபையின் தலைவர் ஷேய்க் ரிஸ்வி முப்தி அவர்களோடு தொடர்பு கொண்டு அதுபற்றி மீளாய்வு செய்ய முடியுமா என வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்கு பதிலளித்த அவர் பத்வா குழு மேற்கொண்ட தீர்மானத்தை மாற்ற முடியாதுள்ளதாக கூறியதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கிண்ணியாவில் ஷவ்வால் தலைபிறை தென்பட்டதை அங்குள்ள உலமாக்களும், சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் தம்மிடம் எடுத்துக் கூறியதை தொடர்ந்தே தாம் ஜம்இய்யதுல் உலமா தலைவருடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். 

தாம் கூறியவற்றை நன்கு செவிமடுத்த ரிஸ்வி முப்தி அவர்கள் கிண்ணியாவிலிருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கு பாலமுனை மௌலவி ஹாஷிம் (மதனி), சம்பந்தப்பட்டவர்களிடம் தீர விசாரித்ததாகவும் கூறினார். 

பிறை காணப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு சில வலிமுறைகள் உள்ளதாகவும், அதற்கு அமைவாக கிண்ணியாவிலிருந்து தெரிவிக்கப்பட்ட தகவல்கள் இருக்கவில்லை என்றும் ரிஸ்வி முப்தி கூறியதாகவும் அமைச்சர் சொன்னார். 

முக்கியமாக, வானிலை அவதான நிலையத்தின் கணிப்பின்படி நேற்றிரவு சூரிய அஸ்தமனத்தின் பின்னர் 14 நிமிடங்களுக்கு மட்டுமே வெற்றுக்கண்களுக்கு தலைப்பிறை தென்படும் என்றும், ஆகவே கிண்ணியாவில் பிறை காணப்பட்ட நேரம் அதற்கு அமைவாக இருக்கவில்லை என்றும் அவர் தம்மிடம் சொன்னதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

அத்துடன், நேற்றிரவு கொழும்பு பெரியபள்ளிவாசலில் தாங்கள் மேற்கொண்ட முடிவை ஏற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமையே பெருநாளை கொண்டாடுமாறும், அதற்கு இணங்காதபட்சத்தில் கிண்ணியா பிரதேசத்தில் மட்டும் பெருநாளை கொண்டாடுவது பற்றி அவர்கள் முடிவு செய்யலாமென்றும் அவர் தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார். 

இவ்வாறிருக்க, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த மௌலவி ஏ.ஆர்.ஏ. அஸீஸ் (மிஸ்பாஹி) இன்று அதிகாலை சரியாக 4.00 மணிக்கு அமைச்சர் ஹக்கீமின் ஊடகச் செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்னர் 'ஜப்னா முஸ்லிம்' இணையத்தில் வெளிவந்த செய்தியை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_9801.html  முந்திய செய்தி

3 comments:

  1. ரவூப் ஹகீம் ACJU தலைவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் பயன் தரவில்லை எனவும் நீங்கள்தானே சொன்னீங்க

    ReplyDelete
  2. Mohamed farhan iwankalum ipudithan awangaluku sarfanatha than poduwanka.ninkalum jamiyathul ulamawa wimarsiyunga nichayam poduwanka. Ithayum Poda matanka. But awangalawathu psrpanka endathsla eluthuren.

    ReplyDelete
  3. Thanks but, itharku munbu naan eluthiya comment engey...? Athuthan 4 per parthu palan adaiyum comment.

    ReplyDelete

Powered by Blogger.