பொத்துவிலில் முஸ்லிம் சகோதரரின் உணவகத்திற்கு தீவைப்பு
(vi) பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட அறுகம்பை உல்லாச புரியில் பிரசித்தி பெற்ற உணவகமொன்று நேற்று தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
உல்லை அறுகம்பையில் உல்லாச விடுதியும் உணவகமும் நடத்திவரும் முஹம்மது சாஜஹான் என்பவரின் வை நொட் எனும் உணவகம் இனந்தெரியாத விஷமிகளால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.உணவகத்தின் கூரை மற்றும் உணவகத்தின் பல முக்கிய தளபாடங்களும் சம்பவத்தில் அழிந்துள்ளன.
பொத்துவில் குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
Muslims be alert at your all places.
ReplyDeleteYou all muslims will know that every anti-muslims activities around Island are leaded by BBS with Gothan and His Ex..President.
So, don't be careless. Be alert especially at night.