ஜனாதிபதி மஹிந்தவின் பெருநாள் வாழ்த்து
‘எமது ஐக்கியம், புரிந்துணர்வுக் கலாசாரத்தில், இலங்கையின் முன்னேற்றத்திற்காக முஸ்லிம் சமூகம் செய்துள்ள பங்களிப்புகளை நினைவு கூருவதற்கு இதுவொரு முக்கிய சந்தர்ப்பமாகும்.’ ‘இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் இத்தகைய புரிந்துணர்வு சமய சுதந்திரமும் தொடர்ந்திருக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம்.’
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது , ‘உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களினால் பேருவகையுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி யடைகிறேன்.
இஸ்லாமிய மார்க்கத்தில் மேன்மைமிகு மாதமான ரமழான் மாதத்தின் பூர்த்தியின் பின்னர் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. புனித அல்குர்ஆனினதும் இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களினதும் போதனைகளை முழுமையாகப் பின்பற்றி ஒரு முக்கியமான இஸ்லாமிய கடமையை ஒரு மாத காலமாக நிறைவேற்றியதன் பின்னர் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் உல கெங்கிலுமுள்ள தமது சகோதர முஸ்லிம்க ளோடு மகிழ்ச்சியுடன் இணைந்து கொள்ளும் நாள் இதுவாகும்.
வணக்க வழிபாடுகள் மற்றும் தியாகங் களினூடாக தமது ஆன்மீக வாழ்வைப் பலப்படுத்த உதவும் ஒரு மாதகால சமய கடமைகளைத் தொடர்ந்து புத்துணர்ச் சியுடன் மகிழ்வுறும் சந்தர்ப்பம் இதுவாகும்.
எமது நாட்டில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலையில், இலங்கை முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை எவ்வித தடைகளுமின்றி முன்னெடுப்ப தற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவார்கள். இது எமது கலாசாரம் மற்றும் நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக இருந்துவரும் பல்வேறு சமயங்களுக்கு மத்தியில் சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வைப் பேணும் பாரம்பரியத்திற்கு அமைவான தாகும்.
எமது ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வுக் கலாசாரத்தில் இலங்கையின் முன்னேற்றத்திற்காக முஸ்லிம் சமூகம் செய்துள்ள பங்களிப்புகளை நினைவு கூருவதற்கு இதுவொரு முக்கிய சந்தர்ப்பமாகும். இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் இத்தகைய புரிந்துணர்வும் சமய சுதந்திரமும் தொடர்ந்திருக்க வேண்டுமென நாம் எதிர் பார்க்கின்றோம். இலங்கை வாழ் முஸ்லிம் களுக்கு இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். இவ்வாறு ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
.jpg)
Muslim community of Sri Lanka from previous years in the month of Ramazan faced many many Nuisance,Bad,Worst,Unhappy,Demolition of Mosques, Makind fire of business placess. Those are who made and did you solved it for us?????????????? what's your needful advice???
ReplyDeleteThease are our question from your ex....
Nanri janathipathi awargale inru perunalai kondadikkondirukkum anaitu makkalukkum enathu perunal vaalthukkal sawajir mudunduwa ibbagamuwa eid mubarak
ReplyDelete