Header Ads



பிக்குகளின் காவியுடையை கழற்ற மாநாயக்க தேரர்களுக்கு அதிகாரம் - பிரதமர்

(Vi) காவியுடையைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடும் பெளத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் அதிகாரத்தை மாநாயக்க தேரர்களுக்கு வழங்கும் முகமாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்கள் பௌத்த மதத்தை மதித்து அதனை ஊக்குவிக்கின்ற போதிலும்    காவியுடையை அணிந்துகொண்டு அதனை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரும் உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டத்தின்படி எந்த விகாரையுடனும் தொடர்புபடாதா, முறை தவறி நடக்கும் பௌத்த பிக்குகளின் பட்டத்தை சங்க சபையால் பறிக்கமுடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படாவிடின் விரைவில் பலர் காவியுடை அணிந்து தங்களை பௌத்த பிக்குவாக பிரகடனப்படுத்திக்கொள்ளுவர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாலோ அல்லது வேறு எவறாலோ அப் பட்டத்தைப் பறிக்க முடியாத போதிலும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் அதனை மகாநாயக்க தேரர்களால் செய்யமுடியுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. உங்கள் கருத்து BBS ஐ சுட்டியதாக இருக்குமென்றால் ....நிச்சயம் உங்கள் பிதமர் பதவிக்கு ஆப்பு தூரத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

    ReplyDelete
  2. இந்தச் சட்டமூலத்திற்கும் எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவாக வாக்களிப்பார்களா?

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. அவ்வாறு சட்டம் கொண்டு வருவதாக இருந்தால் முதல்ல கல கலகொட அத்த ஞாஞசார தேரர்ட காவி உடைய கலட்ட வேண்டும்

    ReplyDelete
  4. நிச்சயம் ஆதரவு வழங்க மாட்டார்கள் காரணம் பதவி பரி போகுமே ............ பாவம் பதவி மோகம் கொண்ட பரதேசிகள் .

    ReplyDelete
  5. இது பௌத்தர்களின் பிரச்சினை. நாங்கள் இதில் புகுந்து கருத்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவர்கள் மத்தியில் ஒழுங்கீனமாக நடப்பவர்களை ஒழுங்கு படுத்துவதற்கு அவர்கள் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நட்வடிக்கைகள் பற்றி நாம் நமது மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கில்லை. சகோதரர்கள் தூர நோக்கோடு சிந்தித்துக் கருத்துத் தெரிவிப்பது நல்லது.

    ReplyDelete
  6. I totally agree with Abu Fawzeema, this is their matter they will find a good solution.

    ReplyDelete

Powered by Blogger.