Header Ads



ரவூப் ஹக்கீமின் நூல் வெளியீடு (படங்கள் இணைப்பு)


(கொழும்பிலிருந்து ஏ.எல்.ஜுனைதீன்)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் அடங்கிய 'சாத்வீகப் போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும்' என்ற தமிழ் ஆங்கில மொழிகளிலான இரு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு 02 ல் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (2013.08.02) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார, பேராசிரியர் எஸ்.பத்மநாதன், பேராசிரியர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.  அமைச்சர் ரவூப் ஹக்கீம் பதிலுரை நிகழ்த்தினார்.  அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாத்வீக போராட்டமும் பிரயோக வலுவுள்ள அரசியலும் என்ற ஆங்கிலம் தமிழ் ஆகிய  மொழிகளில் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்களையும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளித்து வெளியீட்டு வைத்தார்.

 இவ்வைபவத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.பெளஸி, பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, எச்.எம்.எம்.ஹரீஸ், ஏ.எச்.எம்.அஸ்வர், ரங்கா ஆகியோரும்  உட்பட வெளிநாட்டுத் தூதுவர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் என்போரும் கலந்து சிறப்பித்தனர்.



No comments

Powered by Blogger.