ஷீஆக்களின் சீர்கேடு (பகுதி 2) ரமழான் அறிவுப் போட்டி (கேள்வி 25)
சஹாபாக்களை சுவனவாசிகள் என்று ஏற்க முடியாது என மறுத்து போலி ஹதீஸ்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத் தியதனால் ஷீஆக்களை, ராபிழிகள் என்றும் அழைக்கப்படார்கள். ஹதீஸ்களை உருவாக்குவதில் இவர்களில் மூன்று சாரார் உள்ளனர்.
முதலாவது சாரார்: நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை (ஹதீஸை) செவி யுற்றால் அதனை ஒரு அடிப்படையாக அல்லது முன்னுதாரணமாக ஷஷமோடலாக|| வைத்து பல ஹதீஸ்களை உருவாக்குவர். தம் இஷ்டம் போல் ஹதீஸ்களில் கூட்டல் குறைத் தல்களை மேற்கொள்வர்.
இரண்டாவது சாரார்: ஷீயாக்களின் இமாம்களில் ஒருவரான ஜஃபர் ஸாதிக் பெயரால் ஹதீஸ்களை உருவாக்கி, இந்த ஹதீஸை ஜஃபர் ஸாதிக் அறிவித்தார். அவருக்கு இன்னார் இன்னார் அறிவித்த னர் எனக் கூறி இறுதியில் நபி (ஸல்) அவர்கள்தான் இந்த ஹதீஸைக் கூறினார் கள் என்று கூறுவர். (ஜஃபர் ஸாதிக் பெய ரில் முஸ்லிம்களுக்குள் இருக்கும் பக்தியின் காரணமாக அவர் பெயரில் மவ்லீதையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த உண் மையை அறியாத பலர் உள்ளனர்)
மூன்றாம் சாரார்: தங்கள் புத்திக்குப்பட்ட செய்திகளை யெல்லாம் அவர்கள் விரும்பு கின்ற பிரகாரம் கூறி அவைகளையும் ஹதீஸ்கள் என்று அறிமுகப்படுத்துவார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர் களின் அல் மவ்லூஆத், பாகம் 1, பக்கம் 338)
போலி ஹதீஸ்களை உருவாக்கும் கேந்திரஸ்தலமாக மத்திய நிலையமாக கூபா நகரம் அமைந்திருந்தது. ஷீஆக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு நகரமாக அன்றும் இன்றும் இது காட்சியளிக்கிறது.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும்போது, ஈராக் வாசிகளே! ஷாம் நாட்டுக்காரர்கள் உங்களை விடச் சிறந்த வர்களாக இருக்கிறார்கள். அதிகமான நபித் தோழர்கள் அங்கு சென்றதுதான் இதற்கான காரணம். நாங்கள் அறிந்த விஷயங்களையே அவர்கள் அறிவித்தார்கள். உங்க ளிடத்தில் மிகக் குறைந்த நபித்தோழர்கள் தான் வந்தார்கள். ஆனால் நாங்கள் அறிந்த விஷயங்களையும் அறியாத பல விஷயங் களையும் எங்களுக்கு அறிவிக்கிறீர்கள். நாங்கள் அறியாத விஷயங்கள் உங்க ளுக்கு எங்கிருந்து கிடைத்தன? என்று ஆட்சேபித்தார்கள். (நூல: தாரீகுல் கபீர், பாகம் 1, பக்கம் 69)
போலி ஹதீஸ்களை உருவாக்கும் இவர் களது வேகத்தைப் பற்றி இமாம் சுஹ்ரி (ரஹ்) அவர்கள் விபரிக்கையில் ஷஷஎங்களிட மிருந்து ஒருசாண் அளவு ஹதீஸ் வெளியா னால் அவர்களிட மிருந்து ஒரு முழம் அளவு ஹதீஸ் வெளியாகிறது.|| என்று கூறி னார்கள். (நூல:; இப்னு அஸாகிர்)
அதாவது நாங்கள் ஸஹீஹான ஒரு ஹதீஸை அறிவித்தால் ராபிளாக்கள் அது போன்று பத்து மடங்கு ஹதீஸ்களை உரு வாக்கி விடுகிறார்;கள் என்று அவர்களது பயங்கரமான போக்கை இமாம் சுஹ்ரி (ரஹ்) எடுத்துக் காட்டுகிறார்கள்.
அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி என்பவர் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் வந்து, நாங்கள் மதீனாவில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து கேட்கும் ஹதீஸ்களை ஈராக்கில் ஒரே ஒரு நாளில் கேட்டு விடுகி றோமே இது எப்படி என்று கேட்டார். அதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பதில் கூறும்போது ஷஷஉங்களிடம் உள்ளது போன்று நாணய உற்பத்தி செய்யும் இயந் திரம் எங்க ளிடம் இல்லை. நீங்கள் இரவில் அச்சடித்து பகலில் செலவு செய்கிறீர்கள்|| என்று குறிப்பிட்டார்கள். (நூல்: அல்முன் தகா பக்கம்-55)
கள்ள நாணயங்கள் (நோட்டுக்கள்) அச் சடித்து உண்மையான பண நோட்டுக்க ளுடன் கலந்து பாவனைக்கு விட்டுவிடுவது போல் போலி ஹதீஸ்களை உருவாக்கி உண்மையான ஹதீஸ்களுடன் கலந்து விடுவதில் இவர்கள் அதிக கவனம் செலுத் தினார்கள்.
ஹம்மாத் இப்னு ஸலமா(ரஹ்) கூறுகி றார்கள். ராபிளாக்களைச் சார்ந்த ஷைக்கு ஒருவர் என்னிடம் அவர்களது நிலையைப் பற்றி கூறும்போது நாங்கள் ஒன்று சேர் ந்து ஒரு விஷயத்தை நல்லதென கருதி னால் அந்த விஷயத்தை (செய்தியை நபி யவர்கள் கூறிய) ஹதீஸாக உருவாக்கி விடுவோம்|| என்றார். (நூல்: மின்ஹா ஜுஸ் ஸுன்னா பாகம்.1 பக்கம்12- தத்ரீபுர்ராவி. பாகம்.1 பக்கம் 285)
தங்களது நடவடிக்கைகளை மேற் கொள்ள எந்த அம்சத்தை முக்கியமான தாகக் கருதுகிறார்களோ அதனை ஹதீஸ் என்ற பெயரில் உருவாக்கி விடுவதற்கும் தங்கள் பணிக்கு எச்செய்தி தடையாக இருப்பதாக உணர்கிறார்களோ அதனை முறியடித்து விடுவதற்கும் போலி ஹதீஸ் களைப் பயன்படுத்தி விட்டு நபியின்மீது பழியை சுமத்திவிடுவார்கள்.
ஷஷராபிளாக்களிடமிருந்து செய்திகளை பெற்றுக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அவை களை மார்க்கமாக எடுத்துக் கொள்கின்ற னர் என இமாம் ஷரீக் இப்னு அப்துல் லாஹ் அல்கானி (ரஹ்) கூறுகிறார்கள். (நூல்: மின்ஹஜுஸ் ஸுன்னா, பாகம் 01, பக்கம் 13)
ராபிளாக்களைப் பற்றி என்ன சொல் கிறீர்கள் என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்டபோது அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் எந்தச் செய்தியையும் அறி விக்காதீர்கள். என்றார்கள். (நூல்: மின் ஹாஜுஸ் ஸுன்னா பாகம் 1, பக்கம் 13)
பொய்யின் முழுவடிவமாகச் செயல்பட்ட இவர்களிடமிருந்து வரும் எந்தவொரு செய்தியையும் ஏற்றுக் கொள்ளவும் கூடாது மற்றவர்களுக்கு அறிவித்துவிடவும் கூடாது என்று அவர்களது முகத்திரையைக் கிழித்துக் காட்டினார்கள் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது: பொய்யைக் கொண்டு சாட்சி சொல்லக் கூடிய மனோஇச்சையைப் பின் பற்றக் கூடிய ராபிளாக்களை விட ஒரு கூட்டத்தை நான் கண்டதில்லை என்றார்கள். (நூல்: இக்திஸாரு உலூமில் ஹதீஸிலி இப்னி கஸீர். பக்கம் 109)
அலி(ரலி) அவர்களின் சிறப்புக்கள் பற்றி ராபிளாக்கள் உரு வாக்கிய ஹதீஸ்களை கணக்கிட முடியாது என இமாம் இப்னுல் கையும் (ரஹ்) கூறுகிறார்கள். இமாம் அபூயஃலா ரஹ்) கூறும் போது அலி(ரலி) மற்றும் அஹ்லுல்பைத்கள் சிறப்பு பற்றி ராபி ளாக்கள் உருவாக்கிய ஹதீஸ் மூன்று இலட்சத்தைச் சாரும் என்கிறார்கள். (நூல்:அல் மினாருல் முனீப் பக்கம்116. அல்வல்உ வில் ஹதீஸின் நபவி, பக்கம்76)
போலி ஹதீஸ்களை முன்வைத்து தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம் என்ற போக்கில் ராபி ளாக்கள் களம் இறங் கினாலும் இவர்களின் அபத்தங்களை இமாம்கள் தக்க சமயத்தில் அடையாளம் காட்டினார்கள்.
சஹாபாக்கள் மீது கொண்ட காழ்ப் புணர்ச்சியின் காரணமாக ராபிளாக்கள் உருவாக்கிய பொய்யான சில ஹதீஸ்களை கவனியுங்கள்.
உமர் (ரலி) சிஹாக் என்ற விபச்சார பெண்ணுக்குப் பிறந்தவர். அப்துல் முத்தலிப் அப்பெண்ணுடன் விபச்சாரம் செய்தபோது பிறந்தவர் தான் உமர்! அபூ பக்கர் (ரலி) ஷைத்தானின் கொம்பு! அபூபக்கரும் உமரும் பொய்யர்கள் அநியாயக்காரர்கள் நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்!) எவர் அவ்விருவரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாரோ அவர் ஜாஹிலியத்தான வழிகேடான மரணத்தையே தழுவினார்.
நிச்சயமாக உஸ்மான் (ரலி) சபிக்கப்பட்ட அசத்தியத்தில் இருந்தவர். எவர் உஸ் மானை ஏற்றுக் கொண்டவராக மரணித்தாரோ அவர் காளைமாட்டை வணங்கியவனை விட மிகப்பெரிய பாவத்தை செய்த அநியாயக்காரனாக மரணித்தவராவார்.
(இச்செய்தி ஷீஆக்களின் அடிப்படை கொள்கைகளை விளக் கும் நூல்களான உஸுலுல் காபி, பிஹாருல் அன்வார், ஹக்குல் யகீன் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளதாக அப்துல்லாஹ் இப்னு ஸஹீதுல் ஜுனைதி அவர்கள் ஷஷஹிவாருல் ஹாதியுன் பைனஸ் ஸுன்னதி வஷ்ஷீஅதி எனும் தனது நூலில் விபரிக்கிறார். பக்கம் 42, 43)
சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்பட்ட இந்த உம்மத்தின் அதி சிறப்புக்குரிய அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோரை ஷீஆக்கள் எந்தளவு கேவலமாக மதிக்கிறார்கள் என் பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
முஆவியா எனது மிம்பரின் மீது நிற்கக் கண்டால் அவரைக் கொன்று விடுங்கள். (நூல்: ஷரஹ் நஹ்ஜுல் பலாகா பாகம் 01, பக்கம் 135) யாஅல்லாஹ்! முஆவியாவுக்கும், அம்ரு இப்னுஆஸ் அவர்களுக்கும் பித்னா எனும் ஆடையை அணிவிப்பாயாக! அவர்கள் இருவரையும் நரகத்தில் தள்ளி விடுவாயாக (நூல்: மேற்படி நூல் பாகம் 01, பக்கம் 135)
கேள்விகள் 25
கேள்வி – 1. ராபிளாக்களிடமிருந்து செய்திகளை பெற்றுக் கொள்ளாதீர்கள் என்று கூறிய இமாம் யார்?
கேள்வி – 2. முஆவிய்யா மிம்பரில் நிற்பதைக் கண்டால் அவரை கொலை செய்து விடுங்கள் என்று எந்த நூலில் எழுதப் பட்டுள்ளது?

Post a Comment