நவநீதம் பிள்ளை இலங்கை வருகிறார் - பொதுபல சேனா எதிர்க்கிறது
நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த நவநீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார் என பொதுபலசேனா குற்றம் சாட்டியுள்ளது.
உண்மைக்குப் புறம்பானவற்றை உலகுக்கு எடுத்துக்கூறி வரும் நவநீதம்பிள்ளையினை ஒரு உண்மையான நடுநிலையான இராஜதந்திரியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நவநீதம்பிள்ளை யுத்தத்திற்குப் பின்னரான வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமானதும், நடுநிலையானதுமான அறிக்கை ஒன்றினை ஐ. நாவுக்கு சமர்ப்பிப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது.
கடந்த காலங்களில் உண்மையை திரிவுபடுத்தி இலங்கைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தவரே நவநீதம்பிள்ளை.
எனவே அவரின் செயற்பாடுகளினால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கம் ஏற்பட்டது. எனவே அவரது வருகையினால் எமக்கு நன்மை ஏற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை.
எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது நாட்டில் மீண்டும் ஒரு பிரிவினைவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் இடமழிக்கக் கூடாது. ஆனால் நவநீதம்பிள்ளை போன்றவர்கள் இலங்கைக்குள் பிரிவினைவாததத்தினை தோற்றுவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.
நாட்டு மக்கள் மூன்று தசாப்த காலமாக யுத்தத்தின் பிடிக்குள் சிக்கியிருந்தார்கள். ஆனால் அவ்வாறான பிரச்சினைகள் இன்று இல்லை. இந்த நிலையில் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படாத வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.jpg)
You must be kidding...
ReplyDeleteSo, he gets the prize of the Joker 2013 global award for the top joker Mr.BBS general secretary.
ReplyDelete