Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் முகவரியை தொலைக்க முயற்சி

(பாறூக் சிகான்)

யாழ் முஸ்லீம்களின் முகவரியை தொலைக்க வட மாகாண சபை தேர்தலை பயன்படுத்த சிலர் முயல்வதாகவும் மக்கள் சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டுமென யாழ் மாநகர சபை; ஈபிடிபி உறுப்பினர் பி.எஸ்.எம் சரபுல் அனாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தற்போது எதிர்வரும் வட மாகாண சபை தேர்தல் வடக்கின் வசந்த்திற்கு சவால் விட வருகிறது.இதில் யாழ் முஸ்லீம்களின் முகவரியை தொலைக்கவென முகம் தெரியாத  முகவர்கள் சிலபேர் உதயமாகியுள்ளனர்.இவர்கள் எதை சாதித்து காட்டப்போகிறார்கள்,டட்லி செல்வா ஒப்பந்த கால முதல் 1987 ல் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை அதிகாரம் வரை எதை வாரி வழங்கினார்கள்.

1990 ஆண்டு வட மாகாணத்தை விட்டு விரட்டப்பட்டது தான் மிச்சம். தற்போது மத்தியில் அரசாங்கமும்,மாநிலத்தில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவும் பல்வேறு அபிவிருத்திகளை செய்து வருகின்றனர்.

1994 ம் ஆண்டிலிருந்து இன்று வரை யாழ் முஸ்லீம்களுக்கு அமைச்சர் செய்த சேவைகளை எண்ணிப்பாருங்கள்.உண்மை புரியும். எனவே  எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் அமைச்சரின் கட்சிக்கு வாக்களித்து தங்களது  வாழ்வாதார வசதியினை எற்படுத்திக்கொள்ளுமாறு மக்களை  கேட்டுள்ளார்.

1 comment:

  1. யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக கவலைப்பட ஒருவர் உள்ளார்

    ReplyDelete

Powered by Blogger.