Header Ads



அமெரிக்காவில் புகையிரத வண்டியை திருட முயன்ற வினோத திருடன்

டேரியஸ் மெக்கல்லம் என்ற அமெரிக்கர் தனது சிறுவயதிலேயே ரெயில்கள் மீது தீராத ஆவல் கொண்டிருந்தார். அவரது எட்டாவது வயதிலேயே சுரங்க ரெயில் பாதை அமைப்பு முழுவதும் அவருக்கு அத்துப்படியாகி இருந்தது. இந்த எண்ணமே அவரது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. சிறந்த போக்குவரத்துத் தொழிலாளியாக மாறுவதற்கு பதிலாக அவர் இப்போது ஒரு போக்குவரத்து திருடனாக உள்ளார். ஆம், இதுவரை அவர் 29 முறை இத்தகைய திருட்டு முயற்சிகளுக்காகப் பிடிபட்டுள்ளார்.

அவரது வாலிப வயதிலேயே சுரங்க ரெயில் ஒன்றினை ஓட்டிச் செல்ல முயன்ற குற்றத்திற்காகப் பிடிபட்டார். பின்னர் பேருந்து ஒன்றினை ஓட்டிச் செல்ல முயன்று கைதானார். காக்கி உடுப்புடன் போக்குவரத்து காவலராக அல்லது தொழிலாளியாக சென்று செயல்பட்டு பலமுறை சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த 2010 ஆண்டிலிருந்து தொடர்ந்து ஏதோவொரு குற்றத்திற்காக ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறைச்சாலையில் இருக்கும் மெக்கல்லம், சமீபத்தில் ரெயில்வே பேருந்து ஒன்றினை ஓட்டிச் சென்ற குற்றத்திற்காக சிறையில் உள்ளார்.

தனது குற்றத்தினையும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்த வியாழன் அன்று, அவருக்கு 15 ஆண்டுகளுக்கு பதிலாக இரண்டரை முதல் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேற்கொண்டு புலனுணர்வு நடத்தை சார்ந்த சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்படும் என்றும் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகின்றது.

2 comments:

  1. ulagaye thirudubawargal irukkum poadu ivan paravayillai

    ReplyDelete
  2. அமெரிக்கா அரசாங்கமோ முஸ்லிம் நாடுகளின் சொத்துக்களை திருடுது இவன் பரவா இல்ல

    ReplyDelete

Powered by Blogger.