Header Ads



கால்நடைகளை விற்பனைக்காக மாத்திரமே கொலை செய்ய அனுமதி வழங்கப்படும் - நீதிமன்றம்

(SFM) ஆன்மீக தலங்களுக்கு அருகில் மிருகபலி பூஜைகளை நடத்துவதாயின் அதற்காக கட்டாயமாக அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அவ்வாறு அனுமதி இன்றி நடத்தப்படும் பூஜைகளை தடுப்பதற்கு காவற்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மூவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

தேசிய பிக்குகள் முன்னணி உள்ளிட்ட மிருகபலி பூஜைக்கு எதிரான 13 அமைப்புகளினால் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் மிருகபலி பூஜைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணை இடம்பெற்ற போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, முன்னேஸ்வரம் சிறி பத்ரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருகபலி பூஜையை நிறுத்துமாறு மனுவை விசாரணை செய்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.

இதுதவிர கால்நடைகளை துன்புறுத்துவதை தடுக்கும் சட்ட மூலத்துக்கும் இந்த பூஜை எதிரானது என்றும் கால்நடைகளை விற்பனைக்காக மாத்திரமே கொலை செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.