அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எ.எம்.றிஸ்விக்கு நன்றி
(வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறையில் நீண்டகாலமாக நிலவிவந்த வீதிப்பிரச்சினையொன்று தீர்த்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து அம்மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை விளினயடி 1ம் பிரிவிலுள்ள சம்சம் வீதி நீண்ட காலமாக பல அரசியல்வாதிகளிடம் கூறியும் யாரும் செய்யவில்லையாம்.
ஆனால் வீதி அபிவிருத்தித் திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எ.எம்.றிஸ்வியிடம் அம்மக்கள் முறையிட்டபோது பல லட்ச ருபா பெறுமதியான வீதிப்பணியினை ஒரு மாத காலத்திற்குள் செய்து முடித்துள்ளார்.
இதனால் அவ்வீதியிலுள்ள மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு இவ்வீதிக்கு றிஸ்வி வீதி எனப் பெயரிடப்பட வேண்டுமென பிரதேச சபையிடம் மனுக் கொடுத்துள்ளனர். கொங்கிறீட் போடப்பட்ட அவ்வீதியையும் மக்கள் கருத்துத் தெரிவிப்பதையும் காணலாம்.


appada , aduththa kaddama election than .....
ReplyDelete