முஸ்லிம் சமுதாயம் தன்கையாலேயே தன் கண்ணைக் குத்துவதா..?
(உவைஸுல் கர்ணி)
இன்று உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் ஏதோவொரு வகையில் சிக்கல்களிலும் பிரச்சினைகளிலும் மாட்டி நிம்மதியிழந்து காணப்படுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளும் அவர்களுக்கெதிரான தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஒரு காலத்தில் இறைநிராகரிப்பாளர்கள் ஒரவரை ஒருவர் விருந்துக்கு அழைப்பது போல் அழைத்து முதற்கண் இந்த முஸ்லிம்களை அழித்து விடுங்கள் என்று கூறுவார்கள் என்பது இன்று யதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆசியாவில் அமைதியாக முஸ்லிம்கள் வாழ்ந்த சில நாடுகள் இன்று முஸ்லிம்களுக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. முஸ்லிம்களின் சொத்துகள் வியாபாரங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் என்பனவற்றுக்கு இன்று பாதுகாப்பில்லாத ஒரு நிலை காணப்படுகிறது.
இது தம்புள்ள பள்ளிவாசலில் தொடங்கி மகியங்கனை கிராண்ட்பாஸ் என்று விரிவடைந்து சென்று கொண்டிருக்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை இஸ்லாம் நமக்குச் சொல்லித்தராமல் இல்லை.
இன்று பள்ளிவாசல்கள் தாக்கப்படும் போது முஸ்லிம்களின் உள்ளங்கள் கொதித்தெழும்புகின்றன. இது இயல்பானதே. காபிர்கள் உலகத்தை நேசிக்கும் அளவை விட முஸ்லிம்கள் வீரமரணத்தை நேசிப்பது தான் அநீதியையும் அட்டூழியங்களையும் கண்டால் முஸ்லிம்களின் உள்ளங்கள் கொதித்தெழும்புவதற்கான காரணம். அவர்கள் அல்லாஹ்வை அல்லாமல் வேறு எந்த சக்திகளையும் கண்டு அஞ்சமாட்டார்கள். ஆண்கள் இவ்வாறான ஒரு களத்தில் நிற்கும் போது பெண்கள் சூரா கவ்ப், சூரா பீல் போன்ற சூராக்களை அதிகமாக ஓதுவார்கள். இவற்றின் பரக்கத்தினால் காபிர்களின் திட்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகி அவர்களின் உள்ளத்தில் ஒரு வகை அச்சத்தை அல்லாஹ்தஆலா போட்டுவிடுவான். அடுத்தது எந்த பள்ளியை முற்றுகையிடுவார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நாம் அதனை எதிர் பார்க்கவே வேண்டும். எனவே ஒவ்வொரு பள்ளியிலும் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் யாஸீன் சூராவை ஓதி துஆ செய்ய வேண்டும். யாஸீன் சூரா பாத்திஹா மற்றும் குல் சூராக்களின் பின்னால் சமூகத்தின் பாதுகாப்புக்காக செய்யப்படும் கூட்டு துஆக்களின் பலாபலன்களை நேரடியாக நாம் கண்டுள்ளோம். இந்த விடயங்களை பள்ளிவாசல்களின் இமாம்களிடத்தில் எடுத்துக் கூறி அவர்களை இந்த விடயங்களை செய்யுமாறு கூறுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.
அரசியல்வாதிகள் நமக்கு பாதுகாப்பு பெற்றுத் தருவார்கள் என்பது ஒரு புறமிருக்க எமக்கான முழுமையான பாதுகாப்பை அல்லாஹ்தஆலாவால் மட்டுமே நமக்கு வழங்க முடியும். அரசியல்வாதிகளுக்கு சில அழுத்தங்கள் இருக்கவே செய்கின்றன. எனவே அவாகள் சுயாதீனமாக செயற்படுவது மிகவும் கஸ்டமான ஒரு விடயம். அதேவேளை அந்த தலைவர் செய்வார் இவர் செய்வார் என்ற சிந்தனையோ எண்ணமோ ஒரு முஸ்லிமுக்கு ஏற்படக்கூடாது. எமது சகல விடயங்களையும் அல்லாஹ்விடமே முறையிட வேண்டும். செருப்பின் பார் அறுந்தாலும் அதையும் அல்லாஹ்விடமே கேட்குமாறு தான் இஸ்லாம் எமக்குக் கற்றுத் தருகின்றது.
உலமா சபை, சூரா கவுன்ஸில் என்பனவெல்லாம் இருந்தாலும் அதிகார அழுத்தங்கள் அவர்களால் எல்லாவற்றையும் வெளிப்படையாக கூறுவதை தடுத்து விடலாம். தொழுகையில் ஓதப்பட்ட துஆக்களால் இந்தியாவில் எட்டு கோடி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சர்வதேச நாடுகள் தமது அழுத்தங்களை பிரயோகிக்க தொடங்கியது. இன்னும் நாம் அறியாத பல சிக்கல்களை அதிகாரத்திலுள்ளோர் அனுபவித்திருக்கலாம். எனவே அந்த துஆவை மீண்டும் ஓதுமாறு மேற்குறிப்பிட்டவர்கள் கூறுவார்கள் என எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம். ஒருவன் நம்மை தாக்க வரும் போது அவனிடம் அடிவாங்கி கோழையாக மரணிப்பதா அல்லது எதிர்த்து நின்று ஒரு சில நிமிடங்களேனும் சிங்கமாக வாழ்வதா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். யாரும் வந்து அதனை தடுத்து நிறுத்தும் வரை தாக்குபவன் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டான். எந்த பள்ளிவாசல்கள் எந்த ஊhர்கள் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனவோ அவர்கள் அதனை ஓதியே தீர வேண்டும். இதற்கெல்லாம் அவர் சொல்ல வேண்டும். இவர் சொல்ல வேண்டும் என்று பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இன்று இறை நம்பிக்கை குறைவானவர்கள் ஈமானிய பலம் குறைவானவர்கள் எல்லாம் ஊர்த் தலைவர்களாகவும் பள்ளிவாசல் தலைவர்களாகவும் வந்ததன் விளைவுகள் தான் இவை.
எந்த சமுதாயம் நிறுத்தல் அளவைகளில் மோசடி செய்கின்றதோ அந்த சமுதாயத்தின் மீது அநியாயக் கார ஆட்சியாளர்களை சாட்டப்படுவார்கள் என்பது இஸ்லாம் எமக்கு எச்சரிக்கும் விடயம். இன்று இறைச்சிக் கடைகளில் நிறுவை அளவைகளில் மோசடி செய்யப்படுகின்றது. அதனால் அவர்கள் தான் முதல் இலக்காகவுள்ளார்கள். இவர்கள் இந்த அநீதிகளை விட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்காவிட்டால் வெகுவிரைவில் இவர்கள் தமது வியாபாரங்களை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதே போன்று கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்பவர்களும் நிறுத்தல் அளவைகளில் மோசடி செய்பவர்களும் கலப்படங்கள் செய்பவர்களும் அவ்வாறான மோசடிகளை விட்டு விட்டு ஏற்கனவே செய்த குற்றங்களுக்காக பாவமன்னிப்பு தேட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் உங்களது செல்வங்களும் உடல் வலிமையும் உங்களுக்கு பாதுகாப்பு தராது.
அடுத்த மாதம் தேர்தல் இருக்கின்றது. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்து என்ற முக்கியமான தீர்மானத்தை முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நாம் வாக்களித்தால் அவர்கள் இன்றும் பலம் பெறுவார்கள். அதனை அங்கீகாரமாக வைத்து முஸ்லிம்களை அழித்தொழித்து விடுவார்கள். இது தன்கையாலேயே தனது கண்ணை குத்துவதற்கு ஒப்பான செயல்களாகும். முஸ்லிம்கள் சமூகத்துக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லாஹ் நாடாமல் எந்த தீங்கும் யாருக்கும் ஏற்படாது. யாருடைய வாக்குறுதியும் எந்த முஸ்லிமையும் பாதுகாக்காது என்பது கடந்த இரண்டாண்டுகளாக நாம் கண்ட உண்மை. இஸ்லாத்தின் விரோதிகளுடன் சில முஸ்லிம்கள் கூட்டுச் சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடலாம். சில சலுகைகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் சொல்லி நமக்கு ஆசைகாட்டி எமது வாக்கு வங்கிகளை அவர்கள் சுரண்டலாம். யார் எவரை நேசிக்கின்றார்களோ அவர்களுடனே அவர்கள் நாளை மறுமையில் எழுப்பப் படுவார்கள். முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிக்கத் துடிப்பவர்களுடன் நாம் எழும்ப விருப்பமா? அல்லது முஸ்லிம்களாக நாம் எழும்ப விருப்பமா?
அல்லாஹ்தஆலா நாடாமல் எமக்கு யாரும் அபிவிருத்தித் திட்டங்களையோ சலுகைகளையோ வழங்கப்போவதில்லை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். வடமாகாண சபை, வடமேல் மாகாண சபை மற்றும் மத்திய மாகாணம் போன்ற மூன்றிலும் முஸ்லிம்களின் வாக்குத் தான் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. எனவே எல்லா முஸ்லிம் ஆண் பெண்களும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று இறைவனிடம் நல்லதை வேண்டியவர்களாக ஆட்சி மாற்றத்தை வேண்டியவர்களாக வாக்களியுங்கள். உங்களுக்கான புதைகுழியை நீங்களே தோண்டி விடாதீர்கள்.
ஸூரத்துல் ஃபீல் (யானை)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! குழப்பம் இல்லாதொழிந்து தீனை முழவதும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள். (சூரா அல்அன்ஃபால் : 39)
முழுப் பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாலித்து, நிர்வகித்து வருபவன் அல்லாஹ் தான். அவன், அவனால் படைக்கப்பட்டவை அனைத்தும் எவ்வாறு இயங்க வேண்டும் என்ற வழிகாட்டலை அவற்றிற்கு வழங்கியுள்ளான். அவை அதற்கேற்ப ஒரு அளவேனும் பிசகாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே தான் நாம் வானவெளியில் நீந்திச் செல்லும் ஞாயிற்றுக் குடும்பத்திலும், ஏனைய அண்டங்களிலும், தாவர விலங்கியல் உலகத்திலும் மற்றும் எங்கும் அமைதியையும், ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் காண்கிறோம். இதே அமைதியும் ஒழுங்கும் கட்டுப்பாடும் பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதர்களிடத்திலும் காணப்படல் வேண்டும் என அல்லாஹ் விரும்புகிறான். ஆகவே தான் அல்குர்ஆன் பல்வேறு இடங்களில்,
வானம் பூமியுடன் இணைந்து நீங்களும் தஸ்பீஹ் செய்யுங்கள்
என அழைப்பு விடுக்கிறது. ஆனால் மனிதர்கள் இறைவழிகாட்டலை புறக்கணித்து விட்டு தனது பகுத்தறிவு ஆசை என்பவற்றின் தூண்டுதல்களால் செயற்பட்டு இறைபூமியை குழப்பம் நிறைந்த இடமாக ஆக்கி விட்டார்கள். குழப்பம் தனது உச்சநிலையை அடையும் போது அங்கு மானிட இனமே வாழ முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. ஒழுக்கம், பண்பாடு, மானுட நேயம், கட்டுப்பாடு முதலாம் வாழ்க்கை விழுமியங்கள் யாவும் அழிந்து போய் விடும்.
இந்த குழப்பநிலை இல்லாதொழிந்து வாழ்க்கை நெறி இஸ்லாமாகும் வரை போராடுமாறு அல்குர்ஆன் அழைப்பு விடுக்கிறது. போராட்டம், சமூக மாற்றம் புரட்சி ஆகிய சொற்பிரயோகங்கள் உலகிற்குப் புதியவை அல்ல. வரலாற்றின் மிகப் பிற்பட்ட காலத்தில் உலகம் பிரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி ஆகியவற்றை சந்தித்திருக்கிறது. இவை முறையே அடிப்படை அரசியல் மாற்றத்தையும், அடிப்படை பொருளாதார மாற்றத்தையுமே உண்டு பண்ணின. அவை சர்வதேசப் புரட்சியையோ, முழுமை தழுவிய புரட்சியையோ அல்ல. இஸ்லாம் தனிமனித வாழ்விலிருந்து, சமூகத்தின் உயர் பீடமாகிய அரசியல் வரை நடைபெறும் மாற்றத்தையே விரும்புகிறது. சிந்தனைப் புரட்சி, சித்தாந்தப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி, செயற்பாட்டுப் புரட்சி, அறிவியல் புரட்சி, பொருளாதாரப் புரட்சி, இராணுவப் புரட்சி, ஆத்மீகப் புரட்சி என இது அகலமானது. ஆழமானது. யாவையும் வியாபித்தது. இத்தகைய முழுமை தழுவிய புரட்சியையே முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபு தீபகற்பத்தில் ஏற்படுத்தினார்கள். பின்னர் அது சர்வ தேசத் தன்மையை தனக்கே உரிய போக்கில் அடைந்து கொண்டது.
அல்குர்ஆன் தன்னை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை நோக்கி சமூக மாற்றத்தில் ஈடுபாடு காட்டுமாறும், அப்பாதையில் தொடர்ந்தும் போராடுமாறும் அழைப்பு விடுக்கின்றது. அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில் ஏனைய சமயங்களால், சிந்தனைகளால், தலைமைகளால், சாந்தி, சமாதானம் மிக்க நாகரீகமுடைய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு போதும் முடியாது என அல்குர்ஆன் நம்புகிறது. தனிமனித மாற்றத்தையும் சமூக மாற்றத்தையும் தெய்வீகப் போக்கினால் தான் சாதிக்க முடியும். தெய்வீகப் போக்கு என்ற அம்சம் மிக விரிவானது. அதனை நாம் இங்கு நோக்கவில்லை. சமூக மாற்றம் அல்லது இஸ்லாமிய எழுச்சி, அல்லது இறுதி இலக்கை நோக்கிச் செல்லல் என்ற பாதைகளின் கட்டங்கள் பற்றி அல்குர்ஆன் கையாண்டுள்ள சொற்பிரயோகங்களையே சுருக்கமாக இங்கு நோக்க முனைந்துள்ளோம்.
1 தக்பீருர் ரப்
ரசூல் (ஸல்) அவர்களது பிரச்சாரப் பணிகளின் ஆரம்பக் கட்டத்தில் அல்லாஹ் அவர்களை நோக்கி பின்வருமாறு கூறுகிறான் :
போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும் உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக! (சூரா முத்தஸ்ஸிர் : 1 - 3).
இச்செய்தியின் மூலம் தனிமனிதர்களின் சிந்தனையிலும், வாழ்விலும் பெரியதோர் சிந்தனை மாற்றத்தை அல்லாஹ் ஏற்படுத்த விரும்புகிறான். அதுவே இஸ்லாமிய சமூக அமைப்பின் அடித்தளமாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வைப் படைப்பாளனாக, வாழ்க்கையில் தலையீடு செலுத்துபவனாக ஏற்றுக் கொள்ளுங்கள். இறைமைத்துவம் உலகத்தில் யாருக்கும் சொந்தமானதல்ல. அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும். அந்த இறைமைத்துவத்தில் யாரையும் பங்காளராகவும் ஆக்கி விடாதீர்கள். அந்த இறைமைத்துவத்தை தனித்துவப்படுத்துங்கள். பெரிதுபடுத்துங்கள். இவ்வழைப்பைத்தான் நபி (ஸல்) அவர்கள் அரபிகளுக்கு மத்தியில் செய்தார்கள். இதிலிருந்து விளங்குவது என்னவெனில் சமூக மாற்றத்தில் ஈடுபடுவோர் அல்லாஹ்வைப் பற்றிய முழுமையான அறிமுகத்தை செய்பவர்களாகவும், அவனது இறைமைத்துவத்தை பெரிதுபடுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வறிமுகம் சிலை வணக்கத்துடன் கப்று வணக்கத்துடன் நேர்ச்சை வைத்தல், பிரார்த்தித்தல் என்பவற்றுடன் சுருங்கிக் கொள்ளாது முழுமை பெற்றதாக இருக்க வேண்டும். இஸ்லாமிய தஃவத் என்பது சில நன்மைகளைச் செய்யத் தூண்டுவதாயும் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பித்அத்களை அகற்றுவதாயும், சமூகப் பணிகளைச் செய்வதாய் மட்டும் அமைவதில்லை. அது அல்லாஹ் பற்றிய மிகத் தெளிவான கோட்பாடுகளை தனிமனிதர்களின் உள்ளங்களில் பதிக்கச் செய்கின்ற முயற்சியாகும். இதன் விளைவாக பல ஆயிரம் தனிமனிதர்கள் இரகசியத்திலும், பரகசியத்திலும் அல்லாஹ்வைப் பயந்து, தமது சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு இடம் கொடுக்காது அவனது கட்டளைகளுக்கு மதிப்பளித்து தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் அல்லாஹ்வின் இறைமைத்துவத்தை பெரிதுபடுத்திக் கொண்டிருப்பார்கள். சூரா பனீ இஸ்ராயீலின் இறுதி வசனம் தௌஹீதின் அறிவு ரீதியான, செயல் ரீதியான எதிர்பார்க்கைகள் அனைத்தையும் அற்புதமாகக் கூறி,
அவனை எவ்வாறு பெரிதுபடுத்த வேண்டுமோ, அவ்வாறு பெரிது படுத்துங்கள் என நிறைவு பெறுகிறது.
2 இகாமதுத் தீன்
இஸ்லாமியப் புரட்சிக்காக அல்குர்ஆன் கையாண்டுள்ள இரண்டாவது பிரயோகம் இகாமதுத்தீன் ஆகும். சூரா அஷ்ஷுராவின் பதின்மூன்றாவது வசனம் பின்வருமாறு கூறுகிறது :
எந்த தீனை (வாழ்க்கை நெறியை) நூஹுக்கு அவன் வகுத்தளிந்தானோ, மேலும் (முஹம்மதே) எந்த வாழ்க்கை முறையை உமக்கு நாம் வஹியின் மூலம் அறிவித்திருக்கிறோமோ, மேலும் எந்த வழிகாட்டலை இப்றாஹீம், மூஸா, ஈஸா, ஆகியோர்க்கு நாம் வழங்கியிருக்கிறோமோ அதே தீனைத்தான் உங்களுக்காக அவன் நிர்ணயித்துள்ளான். இந்தத் தீனை நிலைநாட்டுங்கள். இதில் பிரிந்து போய் விடாதீர்கள். (அஷ்ஷுரா : 13).
இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியை ஸ்தாபிதம் செய்யுங்கள். ஆத்மீக ஒழுக்க விவகாரங்களுடன் சுருக்கிக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையில் ஒழுங்கமைப்பையும், சமூக நீதத்தையும் நிலைநாட்டுமாறு குர்ஆன் வேண்டுகிறது. இனவாதம், மொழிவாதம், பிரதேசவாதம் பொருளாதாரக் கொடுமைகள் முதலான எதுவும் மனித சமுதாயத்தில் தலைதூக்கக் கூடாது. தொடர்ந்து இதே சூரத்துஷ் ஷுராவின் பதினைந்தாவது வசனம் நபி (ஸல்) அவர்களை பின்வருமாறு பொது அறிவிப்புச் செய்ய வேண்டுகிறது.
உங்களுக்கு மத்தியில் நீதத்தை நிலைநாட்டுமாறும் நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்.
இஸ்லாம் நிலைநாட்டப்படும் போதே சமூக நீதி தழைத்தோங்கும். இதனை சூராவின் பதினேழாவது வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.
அல்லாஹ் தான் இந்த வேதத்தையும், மீஸானையும் (தராசையும்) சத்தியத்துடன் இறக்கியருளினான். (அஷ்ஷுரா : 17)
அதாவது மீஸான் என்பது அல்லாஹ்வின் சட்ட விதியாகும். அது தராசு போல், சரி-தவறு, சத்தியம்-அசத்தியம், நீதி-அநீதி, நேர்மை-அக்கிரமம், ஆகியவற்றை வேறுபடுத்தித் துள்ளியமாய் காட்டி விடுகிறது.
சமூக அநீதிகள் இல்லாமல் ஆக்கப்பட்டு சமூக நீதத்தை நிலைநாட்டுமாறு குர்ஆன் வேண்டுகிறது. இதற்குத் தேவைப்படும் மிகப் பலமிக்க ஸ்தாபனம் அரசாகும். எனவே தான் இஸ்லாமிய எழுச்சிப் போராட்டம் இஸ்லாமிய அரசை தனது இலக்காக் கொண்டுள்ளது. அதன் மூலமே இகாமதுத்தீன் முழுமை பெறும்.
3. இழ்காருத்தீன்
இஸ்லாமியப் புரட்சிக்காக அல்குர்ஆன் கையாண்டுள்ள மூன்றாவது பிரயோகம் இழ்காருத்தீன் (மார்க்கத்தை மிகைக்ககச் செய்தல்) என்பதாகும். அறிவாதாரங்களால், தெளிவான விளக்கங்களால், ஆழ்ந்த கருத்தாடல்களால், ஆயுதப் போராட்டத்தால் இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறியை மிகைக்கச் செய்தலும் ஏனைய வாழ்க்கை நெறிகளை தோல்வியுறச் செய்வதுமாகும். அல்குர்ஆன் இதனை சூரத்துத் தௌபாவின் முப்பத்து மூன்றாவது வசனத்திலும், சூரா பத்ஹின் இருபத்து எட்டாவது வசனத்திலும் சூரத்துஸ் ஸஃபின் ஒன்பதாவது வசனத்திலும் ஒரே வார்த்தையில் பின்வருமாறு கூறுகிறது :
அல்லாஹ் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். அவன் அந்த மார்க்கத்தை ஏனைய அனைத்து மார்க்கங்களை விடவும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக! இந்த உண்மைக்கு அல்லாஹ்வின் சாட்சி போதுமானதாகும். (சூரா அல் பத்ஹ் : 23).
இவ்வசனத்துக்கு விளக்கமளிக்க வந்த ஷாஹ் வலியுல்லாஹ் தஃலவி (ரஹ்) அவர்கள், முழு குர்ஆனினதும் சுழற்சி மையம் இவ்வசனமேயாகும், எனக் கூறியுள்ளார். இஸ்லாம் இகாமத் செய்யப்படுவது மட்டும் போதுமானதல்ல. அதனைத் தொடர்ந்து அது நிலைநாட்டப்படும் பூமியில் ஏனைய அனைத்துச் சிந்தனைகளும், செயற்பாடுகளும் செயல் இழந்து போய் விட வேண்டும். வேறோர் வாழ்க்கை நெறி அங்கு வாழ முடியாது. ஏனெனில் அவை ஒருபோதும் வாழ்வை வளப்படுத்த முடியாதவை. அழிவையும், நாசத்தையும் உண்டு பண்ணிக் கொண்டிருப்பவை. எனவே, யார் வெறுத்த போதும் மார்க்கத்தை மிகைக்கச் செய்வது உங்களது பொறுப்பாகும் என முஹம்மத் (ஸல்) அவர்கள் வேண்டப்படுகிறார்கள். இப் பாதையில் ஆயுதப் போரட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக சில போது ஆகிவிடுகிறது. இதனையே சூரத்துல் அன்பாலின் 39 வது வசனம் பின்வருமாறு கூறுகிறது :
இறைநம்பிக்கை கொண்டவர்களே! குழப்பம் இல்லாதொழிந்து தீனை முழவதும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை நீங்கள் இந்நிராகரிப்பாளர்களுடன் போர் புரியுங்கள். (சூரா அல்அன்ஃபால் : 39)
.jpg)
Post a Comment