Header Ads



நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது

நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தை, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 3 வாரங்களுக்கு மின்சார கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள வருடாந்த பராமரிப்பு நடவடிக்கைகளின் பொருட்டு அனல்மின் உற்பத்தி நிலையத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், மின் உற்பத்தி நிலையத்தின் வருடாந்த பராமரிப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த் தேக்கங்கள் அனைத்தும் முற்றாக நிரம்பியுள்ள நிலையில், முழு அளவில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படக் கூடிய தன்மை காணப்படுவதாக இலங்கை மின்சார சபை  சுட்டிக்காட்டியுள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதன் காரணமாக, தொடர்ச்சியாக மின்சார விநியோகத்திற்கு தடை ஏற்பட மாட்டாது என்றும் இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது. nf

1 comment:

  1. "தற்காலிகமாக மூடப்படுகிறது "என்பதை விட அது இயங்கும் காலத்தில் "தற்காலியமாக திறக்கப்படுகிறது" என்று சொல்வதே மிகப்பொருத்தம்

    ReplyDelete

Powered by Blogger.