அரசுக்கு எதிரான 'சமத்துவ அணி' உருவாகிறது
(ஏ.எல்.ஜுனைதீன்)
அரசுக்கு எதிரான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் பங்கேற்புடன் ஆளுந்தரப்பு உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொண்டு 'சமத்துவ அணி' எனும் மாபெரும் சக்தியொன்று உதயமாகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த 'சமத்துவ அணி' கொழும்பு பொது நூலகத்தில் எதிவரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சமத்துவ அணியில் உள்ள அனைத்து தரப்பினரிடையேயும் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய 10 கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைச்சாத்திடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வண. மாதுலுவாவே சோபித்த தேரர் முன்வைத்துள்ள கருத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சில் ஏற்பட்ட இணக்கத்துக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
.jpg)
stop using VANA, for theros, this the is against islam.
ReplyDelete