Header Ads



தற்போதைய அரசு, நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனம் போன்று உருவெடுப்பு


அரசியல்வாதிகள் செய்கின்ற சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த முடியாமலும், பிரதேச ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க முடியாமலும் இருப்பதால் தற்போதைய அரசு நகர சபையின் குப்பை சேகரிக்கும் வாகனம் போன்று உருவெடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:

பிரதேச அரசியல்வாதிகளால் மிகத் துரிதமாகத் தீர்வுகாணக் கூடியதாகவுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்பதால் அவ்விடயம் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலரிடம் செல்லக்கூடிய நிலைமை ஏற்படுகின்றது. 

இவ்வாறாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கீழ் மட்டத்திலிருந்து மேலிடத்திலுள்ள அரசியல்வாதிகள் ஆவன செய்யாத விடத்து அவர்களினால் நடத்தப்படுகின்ற அரச விரோத செயல்களில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.- என்றார். 

மேலிடத்திலுள்ள அரசியல்வாதிகள் ஆவன செய்யாதவிடத்து அவர்களினால் நடத்தப்படுகின்ற அரச விரோத செயல்களில் எவ்வித மாறுதலும் ஏற்படாது.

No comments

Powered by Blogger.