முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வல்லமை அக்குறணைக்கு உண்டு
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் உரிமையுடன் வாழ வேண்டும் என்று மத்திய மாகாண சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் அம்.ரஹ்மத்.மலிக் தெரிவித்தார்.
2013 08 22 இரவு அக்குறணை கஸாவத்தையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
நாங்கள் இலங்கையில் சிறுபானமையினராக வாழந்தாலும் எங்களது உரியைகளுடன் வாழ வேண்டும் . மத்திய மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வல்லமை அக்குறணைக்கு உண்டு. கண்டி மாவட்டத்தில் 54 வருடங்கள் முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்துவத்தை அக்குறணை மக்கள் பாதுகாத்து வந்துள்ளனர்.
ஆன்றைய காலங்களை விடவும் இன்றைய காலத்தில் முஸ்லிம்களது பிரதிநிதித்துவம் அத்தியவசியமாக உள்ளது நாம் அறிந்ததே. எனவே முஸ்லிம்கள் சிந்தித்து தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.
இன்று வாழக்கை செலவுகள் அதிகரித்துள்ளது. அதை விடவும் முஸ்லிம்கலாகிய எங்களுக்கு பல கோனங்களிலும் சவால்கள் வந்த வன்னம் உள்ளன. இவைகளுக்கு முகம் கொடுப்பதற்கு எமது பிரதிநிதித்துவம் பலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் இங்கு கூறினார்.

வாக்குகளுக்காக சமூகம் என்றும்,எங்களது உரிமை என்றும் வருபவர்களை இன்று தான் முதலாவதாக காணக்கிடைக்கிறது இவர்களை தேர்தலின் பின்னர் ரமழான் முடிந்த பின்பு பள்ளிவாசல்களில் தேடப்படும் முஸ்லிம்கள் போன்று தேட வேண்டுமோ தெரியவில்லை.
ReplyDelete