'பாராளுமன்றத்தில் உரத்துப் பேசுவதால் எங்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை'
(இப்னு செய்யத்)
சம்மாந்துறை ஜலாலியா ஜூம்ஆப்பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அல்-ஹாபிழ், மௌலவி ஏ.ஏ.அலிஅஹமட் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவாற்றினார். அவர் உரையாற்றுகின்ற போது '
இன்று பள்ளிவாசல்கள் பெரிதாக கட்டப்பட்டு நவீன பொருட்களைக் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளிவாசல்களில் தொழுவதற்கு ஆட்களில்லை. பள்ளிவாசல்கள் இபாதத்துக்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் வணக்கங்களின் மூலமாக அலங்கரிக்கப்பட்டன.
இன்று நம்மிடையே இபாதத்திற்குள் வெகுவாக குறைவடைந்து விட்டன. இதனால், எம்மைப் பற்றிய அச்சத்தை அல்லாஹ் அந்நியர்களிடம் இருந்து அகற்றி விட்டான். இதன் காரணமாக முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எமது நாட்டிலும், வெளிநாடுகளிலும் அந்நியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று இலங்கையில் பள்ளிவாசல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் பேசலாம். இந்தப் பேச்சிக்களினால் எங்களுக்கு பாதுகாப்புக்கள் ஏற்பட்டுவிடப் போவதில்லை. எமது இபாதத்திற்களை அதிகரித்து அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும். நம்மில் அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்கள் சொன்ன வாழ்வு முறையும் வருமாக இருந்தால் எல்லாம் சீரடைந்து விடும்.
அல்லாஹ் ரமழான் மாதத்தை ஏற்படுத்தி தந்தமைக்கான பிரதான காரணம், அதிகமாக இபாதத்திற்களில் ஈடுபட்டு நம்மில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவாகும். நூம் தற்போது கடைசிப் பத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். பள்ளிவாசல்களில் இஹ்திகாப் இருந்து அதிக அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடல் வேண்டும். அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்களாக எமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.' என்றார்.

இந்த நாட்டிலே நாம் சிறுபான்மை சமூகமாயினும் இந்நாட்டு மக்கள்தான். இங்குள்ள அரசியலமைப்பு அடிப்படையில் பாராளுமன்றம்தான் உரிமைகளுக்காகப் போராடும் அதியுயர் பீடம்.
ReplyDeleteஅதை விட்டுவிட்டு ஊரூர்களில் மேடை போட்டா பேசுவது?
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் கடமையைச் செய்யட்டும். அதை கொச்சைப்படுத்தி ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு உறுப்பினர் அல்லாஹ்வைப் பயந்து உரிமைக்காகப் பேசுவதையும் நிறுத்திக் கோழைகளாக ஆக்கி விடாதீர்கள்.
அந்தக் கோழைத்தனத்தை அ.இ.ஜ.உ. செய்ததினால்தான் இவ்வளவு தூரம் போயிருக்கிறது என்று அ.இ.ஜ.உ. வைக் குறை சொல்லவும் நான் தயாராயில்லை. ஏனென்றால் அது தான் விதி.
விதியை நம்புகிறோம். நடந்ததிலிருந்து பாடம் படிப்போம்.
பேசக்கூடிய எந்தக் களமாயிருந்தாலும் உரிமைக்காகப் பேசத்தான் வேண்டும். விதிப்படி நடக்கும். கோழைத்தனத்தை நியாயப்படுத்த யாராலும் முடியாது.
அல்லாஹ்வின் வீட்டை கட்ட அள்ளி அள்ளித் தாருங்கள் என்று ஊருலகத்தில் கோடி கோடியாகச் சேர்த்து பள்ளிகள் என்ற பெயரில் அநியாயச் செலவுகள் செய்து வீண் விரயம் செய்யும் டிரஸ்டிமார்கள் பாடம் படிக்க மாட்டார்கள். அலங்காரங்கள் பள்ளிகளுக்குத் தேவையா என்று குரல் கொடுப்பவர்களை ஏளனப்படுத்தும் டிரஸ்டிமார்களும் ஆடம்பரவாதிகளும்தான் இன்று சமூகத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.
நிலத்துக்கு கிரனைட், டைல்ஸ் பிடிக்கிறார்கள். பின்னர் அதற்கு மேலே காப்பட் போடுகிறார்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்வது போல்... அல்லாஹ்வுக்கு எந்த விதமான அச்சமுமில்லாமல்..
பள்ளிக்குத் தொழ வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆக இருக்கும். பள்ளியில் பொருத்தியிருக்கும் ஸ்பொட் லைட்களின் எண்ணிக்கை 1500 ஆக இருக்கும். இதற்கெல்லாம் இவர்கள் எப்படிக் கணக்குக் காட்டப் போகிறார்கள்?
இந்தக் கூட்டத்திலிருந்து அல்லாஹ் எம்மைக் காப்பானாக!
Where is the Jammiyathul Ulama (JU) now? When Muslims faced a few problems, JU got too furious and requested Muslims to ask more and more duas, especially asked Muslims to recite kunooth during five times prayers. After some time, they all of sudden said that now the problems are almost over and we don't want to recite kunooth during prayers. Can this JU honestly say that the problems for Muslims are now less than before? Can they justify this? Day by day problems are increasing. We live in fear and don't know what problems we will face tomorrow? Parliament Muslim politicians do nothing/never speak for the community. Perhaps JU was threatened or did they also betray us for their own benefit? Allah knows best. Now we need to ask only duas. We should hardly trust these people's words. May Allah bless us all to live in peace with all Sinhala and Tamil community!
ReplyDeleteINDEED SIR, As muslims we are belive in god ALLAH who can really provide us the Security, no governments or Armies and specially we should not blame Jamiathul Ulama they doing there job perfectly, we are the bladdy people who refuse to giveup our sins and expecting Dua's need to be Accepted, according to Hadith do not Blame the ULAMA's because that discribed to "poisoned meat", the one who blaming JM who first correct thereself, those bladdy Mad dogs don't even undestand what they are talking, we keeping trust in money,power,government,Army,wealthy and all thee worldly things but not ALLAH who create Us and made this All. THINK
ReplyDeleteMr. Hakeem Soa
ReplyDeleteCriticizing Ulama does not lead anyone to Kufr. If an Ulama preaches against Islamic Teachings he should be criticized in order to enlighten the audience. Fear Allaah before asking someone whether he is a Muslim. It is none of your business and none of my business. I feel ashamed of people like you claiming others are non-muslims.
Fear Allaah.