'அமைச்சர் அதாஉல்லா, அமைச்சர் உதுமாலெப்பைக்கு விளங்கப்படுத்த வேண்டும்'
மூத்த விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கப்படாமலும், சாத்திய அறிக்கை பெறப்படாமலும் விவசாயத்திணைக்களத்தோடு போதியளவு கலந்துரையாடப்படாமலும் சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தை ஆரம்பித்தது உதுமாலெவ்வை அவர்கள் செய்த மிகப்பெரிய தவறாகும். துறையடிப்பாலத்தின் ஊடாக செல்லும் வழியென்பது கடல் மட்டத்தைவிட தாழ்வான பிரதேசமாக இருக்கின்ற காரணத்தினால், சம்புக்களப்பு வடிச்சலைக்கொண்டு வந்து அக்கரைப்பற்று பிரதேசத்தினூடாக சின்ன முகத்துவாரம் வரும் வரைக்கும் கொண்டு சென்று விடுவதில் சிக்கல் இருக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் தொழிநுட்ப ரீதியாக அது பிழையான விடயமாகவும் இருக்கின்றது அம்பாரை மாவட்டத்தினுடைய அரச அதிபராக சுனில் கன்னங்கரா இருந்தபோது, 1956ஆம் ஆண்டிற்குப்பிறகு உருவான கல்லோயா திட்டத்தின் விளைவாக விவசாயக் காணிகளில் தேங்கி இருக்கின்ற நீரை இரண்டு தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற சாத்தியம் இருப்பதாகக் கூறினார். அதில் ஒன்று நன்னீர் மீன் வளர்ப்பு மற்றையது கிராமிய நீர் வழங்கல் திட்டம். அந்த சபையிலே அப்போதைய பிரதேச சபைத் தவிசாளராக நானும் அதே போன்று அமைச்சர் உதுமாலெவ்வையும் கூட பிரசன்னமாகியிருந்தோம். அப்படி அந்த இரண்டு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுவதற்கு இது சாத்தியமாக இருக்கின்றது என்றிருந்தும் கூட சரியான முறை பின்பற்றப்படவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்.
சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் சம்மந்தமாக எழுந்துள்ள பிரச்சினை சம்மந்தமான கூட்டம் அக்கரைப்பற்றில் உள்ள அவரது காரியாலயத்தில் இடம்பெற்றபோதே மேற்படி கூறினார். தொடர்ந்து அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும், இத் திட்டத்தின் ஊடாக விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற அசௌகரியங்களுக்காகவும், நஷ்டங்களுக்காகவும் நஷ்ட ஈடு கொடுக்கப்படுகின்ற அதே நேரம், இந்தத் திட்டத்தின் ஊடாக கிடைக்கக் கூடிய நன்மைகள் பற்றிய அல்லது திட்டத்தின் சாத்தியம் பற்றிய சாத்திய வள அறிக்கை பெறப்பட்டு இதனை நன்கு திட்டமிட்ட வகையில் முன் கொண்டு செல்லவேண்டும். இதில் உதுமாலெவ்வை அவர்கள் சாத்தியவள அறிக்கை பெறாமலும் அதே போன்று ஆகக்குறைந்தது 5 அல்லது 6 வருடகால தொடர்ச்சியான கண்காணிப்பும், அவதானமும் இன்றி எடுத்த தீர்மானத்தினால் இன்று அக்கரைப்பற்று நகரிலே இருக்கின்ற சிறுபோகம் செய்யக்கூடிய காணிகளில் ஏறத்தாழ 500 ஏக்கர் காணிகள் உரிய காலத்திற்குள் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சின்ன முகத்துவாரத்தை வெட்டிக் கடலிலே நீரைக் கொண்டு சேர்ப்பதற்கு விவசாயிகள் சென்றபோது அங்கிருக்கின்ற மீனவர்கள் விவசாயிகளோடு முறண்பட்டு பெரும் பிரச்சினை உருவானது. தற்போது செய்யப்பட்டிருக்கின்ற விவசாயத்தில் அரைப் பங்கு இதுவரைக்கும் விளைச்சல் அடையாமலும் அதே போன்று ஒரு சில விளைச்சல் அடைந்திருக்கின்ற காணிகள் வெட்ட முடியாமலும் ஒரு நிர்க்கதியான நிலமைக்கு அக்கரைப்பற்று விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அக்கரைப்பற்றிலிருந்து அமைச்சர் உதுமாலெவ்வைக்கு 9000 வாக்குகளை அளித்த மக்களுக்கு, உதுமாலெவ்வை அவர்கள் இந்த சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் ஊடாக மிகப் பெரும் துரோகத்தை செய்ததாகவே நாங்கள் உணர்கிறோம். ஆகவே இத்திட்டம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இத் திட்டத்தின் ஊடாக மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அசௌகரியங்களுக்காகவும், நஷ்டங்களுக்காகவும் நஷ்ட ஈடு வழங்கப்படுகின்ற அதே நேரம், இத் திட்டத்தின் ஊடாக கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றிய அல்லது இத் திட்டத்தின் சாத்தியம் பற்றிய சாத்திய வள அறிக்கை பெறப்பட்டு இதனை நன்கு திட்டமிடட வகையில் முன் கொண்டு செல்ல வேண்டும். அதே நேரம் மாற்று வழியினூடாக இந்த சம்புக்களப்பு வடிச்சலை எந்த இடத்திற்கு கொண்டுபோய்ச் சேர்க்கலாம் என்பது தொடர்பாக ஒரு புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, இதனூடாகத்தான் சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் அமுல்படுத்தப்படவேண்டுமே தவிர தொடர்ச்சியாக இப்போது தொடங்கிவைக்கப்பட்டிருக்கின்ற நிலையிலிருந்து மீண்டும் அது எடுத்துச் செல்லப்படுமாக இருந்தால் அது தோல்வியை அடையும்.
ஆகவே, அமைச்சர் அவர்கள் தங்களுக்கிருக்கின்ற கர்வத்தை கழைந்து வைத்துவிட்டு அக்கரைப்பற்று மக்கள் அவருக்கு வாக்களித்த நன்றிக்காக அக்கரைப்பற்று விவசாயிகள் படுகின்ற துன்பத்தை இவர் கவனத்தில் எடுத்து இந்த திட்டத்தை மாற்றியமைத்து நிவாரணம் வழங்கவேண்டும். அது மட்டுமல்ல, இத்திட்டத்தை மாற்றுவதனூடாக அக்கரைப்பற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதற்கு அமைச்சர் அதாஉல்லா அவர்களும் துணை போயிருந்தால் அவர்களும் தன்னுடைய திட்டம் பிழைத்திருக்கின்றது என்பதனை உதுமாலெவ்வை அவர்களுக்கு விளங்கப்படுத்தி அக்கரைப்பற்று விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று மேலும் தெரிவித்தார்.

THAMBI THAVAM AVARHALE:MUTHALIL UNGADA THALAIKKU NALLA VADICHCHAL ONRU PODUNGA,ILLAVITTAL MALAIPEIYYUM POTHU NADU VAKKUKULLALA MATTUME NEER ODUM,NEENGALUM SEIYYA MAATTIYAL,SEIRAVANAIYUM VIDA AATTIYAL..............ATHU SARI IMMURAI HAKKEEM NAANAVAI IFTHARUKKU AKKARAIPATTUKKU KOOTTI VARA ILLIYA,VANTHA ENGALUKKITTAYUM SOLLUNGO......
ReplyDeleteSave and service to the public first then argive whatever you like but do not make fool others.
ReplyDelete