கத்தார் வாழ் இலங்கையர்ளுக்கான பெருநாள் ஒன்றுகூடல்
கத்தாரில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் தஃவா மற்றும் சமூக நலப் பணிகளில் காத்திரமான பங்களிப்புகளை செய்து வரும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையத்தின் (SLIC
QATAR) ஏற்பாட்டில் இம்முறையும் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
கத்தார் இஸ்லாமிய கலாசார மையத்தில் ஆண்கள், பெண்களுக்கென வௌ;வேறாக இடம்பெற்ற இவ்வொன்றுகூடலில் இலங்கையைச் சேர்ந்த கத்தார் வாழ் சகோதர, சகோதரிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர். மேற்படி ஒன்றுகூடல் உறவுகளைப் பிரிந்து வாழும் இலங்கையர்களின் உணர்வுகளை மனமாற பரிமாரிக்கொள்வதற்கான ஒரு சிறந்த களமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வின் போது, சுவாரஸ்யமான கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான பெருநாள் பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் பெருநாள் ஆகார விருந்தோம்பல்கள் என்பனவும் இடம்பெற்றமை இந்நிகழ்வை மேலும் மெருகூட்டியது.
இலங்கை இஸ்லாமிய நிலையம் - கத்தார்.



I think the organisers of this programme did not give out a clear notification to everyone as here it seems only handful of people have attended to this event.
ReplyDeleteDear Brother in Islam,
ReplyDeleteWe thank for your opinion. please note that the Event was published to all public as up to 1000 contacts and on face book also. sorry that if it hasn't reached you.
for your reference... visit to link below.
https://www.facebook.com/slicqatar